ஆளுமை:நசீஹா, ஏ

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நசீஹா
தந்தை அலியார்
தாய் மௌப்ரா உம்மா
பிறப்பு 1973.11.23
ஊர் சம்மாந்துறை
வகை எழுத்தாளர், கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


நசீஹா, ஏ (1973.11.23) சம்மாந்துறையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை அலியார்; தாய் மௌப்ரா உம்மா. இவர் தனது ஆரம்பக் கல்வி முதல் உயர்க் கல்வி வரை சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் கற்றார். பாடல் எழுதும் திறமைக் கொண்ட நசீஹா மாணவர் மன்றத்துக்காக சினிமாப் பாடல் ஒன்றை மெட்டுக்கு ஏற்றவாறு வரிகளை அமைத்து மாணவர்களுக்கு பொருத்தமான வகையில் எழுதிக் கொடுத்துள்ளார். எழுந்து ஓடி வா கண்ணா என்ற கவிதையை தனது மகனின் குரலில் பிறை எவ்எம் வானொலியில் வாசித்ததன் ஊடாக தொடர்ந்து பிறை எவ்எம் வானொலிக்கு ஆக்கங்களை எழுதியுள்ளார். 2015ஆம் ஆணடு இவர் எழுதிய பெண் என்ற தலைப்பிலான கவிதைக்கு சம்மாந்துறை சாகித்திய விழாவில் முதலிடமும் பரிசும் கிடைத்துள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நசீஹா,_ஏ&oldid=408018" இருந்து மீள்விக்கப்பட்டது