ஆளுமை:துஸ்யந்தன், கைலாயநாதன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் துஸ்யந்தன்
தந்தை கைலாயநாதன்
தாய் -
பிறப்பு 1982.12.08
ஊர் கிளிநொச்சி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

துஸ்யந்தன், கைலாயநாதன் (1982.12.08 -) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கண்ணகிநகரை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை கைலாயநாதன். இவர் ஆரம்பக்கல்வியை கிளி/ தட்டுவன்கொட்டி கண்ணகி அம்மன் வித்தியாலயத்திலும் உயர்கல்வியை கிளி/ முருகானந்தாக் கல்லூரியிலும் கற்றார். யாழ் பல்கலைக்கழகத்தில் இளங்கலைமாணி பட்டத்தையும், முதுகலைமாணி பட்டத்தையும் பெற்றார்.

2003 இல் சைவ பரிபாலண சபை நடாத்திய சமய அறிவு போட்டியில் 2 ஆம் இடத்தையும், பேச்சு, நாடகம், விவாதம், நாட்டார் வழக்காற்றியல் துறைகளில் பிராகசித்தவராகவும் விளங்குகிறார். 2014 முதல் காலியில் உள்ள தீவுத்துறை தமிழ் கனிஸ்ட வித்தியாலயத்தில் ஆசிரியராக பணியாற்றி கலை, கலாசர செயற்பாடுகளில் இடையறாத பணியாற்றி வருகிறார்.

வளங்கள்

  • நூலக எண்: 82754 பக்கங்கள் 54-55