ஆளுமை:திலக்சனா, செல்வராசா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திலக்சனா
தந்தை செல்வராசா
தாய் மணிமாலா
பிறப்பு 1993.02.08
ஊர் கிளிநொச்சி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திலக்சனா, செல்வராசா (1993.02.08) கிளிநொச்சி, பூநகரி கிராஞ்சியில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்வராசா; தாய் மணிமாலா. ஆரம்பக் கல்வியை கிராஞ்சி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும் இடைநிலை, உயர் கல்வியை கிளிநொச்சி வேரவில் இந்து மகாவித்தியாலயத்திலும் கற்றார். இவர் யாழ் பல்கலைக்கழக இறுதியாண்டு கலைப்பிரிவு மாணவியாவார். பல்கலைக்கழகத்திலேயே இவர் எழுத்துத்துறைக்கு பிரவேசித்துள்ளார் திலக்சனா. கவிதை, விவாதம் ஆகிய துறைகளில் ஈடுபாடுடைய எழுத்தாளர். இவரின் ஆக்கங்கள் உதயன் பத்திரிகையிலும் யாழ் பல்கலைக்கழத்தினால் வெளியிடப்படும் கலையாழி சஞ்சிகையிலும் வெளிவந்துள்ளது. சபிக்கப்பட்ட பூ என்னும் கவிதைத் தொகுதியை 2017ஆம் ஆண்டும் ஈழவாடை என்னும் கவிதைத் தொகுதியை 2018ஆம் ஆண்டு இலக்கிய உலகிற்கு தந்துள்ளார் எழுத்தாளர். இவரின் கவிதைத் தொகுதி பெண்ணியம், மண்வாசனை சார்ந்ததாக உள்ளது.


குறிப்பு : மேற்படி பதிவு திலக்சனா, செல்வராசா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.