ஆளுமை:திலகா, கோபிரமணன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திலகா
தந்தை அழகுரெத்தினம்
தாய் ஜெயலக்ஷ்மி
பிறப்பு 1986.07.25
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திலகா, கோபிரமணன் (1986.07.26) மட்டக்களப்பு பெரியபோரதீவில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை அழகுரெத்தினம்; தாய் ஜெயலக்ஷ்மி. ஆரம்பக் கல்வியை பெரியபோரதீவு பாரதி வித்தியாலயத்திலும் உயர்நிலைக் கல்வியை வின்சன் உயர்தர தேசிய கல்லூரியிலும் கற்றார். முன்பள்ளி தொடர்பான டிப்ளோமா முடித்துள்ள இவர் பேராதனைப் பல்கலைக்கழத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்பை மேற்கொள்கிறார். படிக்கும் போதே எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ளார். கவிதை, சிறுகதை, விமர்சனம், ஓவியம் வரைதல் என பன்முகத் திறமைகளைக்கொண்ட எழுத்தாளர் தமிழர்தளம், அரங்கம், மித்திரன் வாரமலர், தினமுரசு, கா நாளிதழ் போன்றவற்றில் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. இந்திய சஞ்சிகையான குமுதத்திலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

குறிப்பு : மேற்படி பதிவு திலகா, கோபிரமணன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:திலகா,_கோபிரமணன்&oldid=309500" இருந்து மீள்விக்கப்பட்டது