ஆளுமை:தார்சீசியஸ், சிங்கராயர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தார்சீசியஸ்
தந்தை சிங்கராயர்
பிறப்பு 1939.07.04
ஊர் குருநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தார்சீசியஸ், சிங்கராயர் (1939.07.04 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர், சமாதான நீதவான். இவரது தந்தை சிங்கராயர். இவர் 1954 ஆம் ஆண்டிலிருந்து நாடகக் கலைஞனாகவும் நடிகனாகவும் இயக்குனராகவும் எழுத்தாளனாகவும் திகழ்ந்தார்.

இவர் 1959 ஆம் ஆண்டிலிருந்து கொழும்புத்துறை ஆசிரியர் கலாசாலையில் ஏரோதியாள், சோக்கிரட்டீஸ், சேரன் செங்குட்டுவன், ஓதல்லோ ஆகிய நாடகங்களிலும் 1962 ஆம் ஆண்டு திருகோணமலை சென். ஜோசப் கல்லூரியில் ஊதாரிப்பிள்ளை நாடகத்திலும் நடித்தார். இவர் குருநகர் கலைக்கழகம், குருநகர் நாட்டுக்கூத்து மன்றம் ஆகியவற்றின் தலைவராகவும் குருநகர் நடன நல்லிசைக் கலாமன்றத்தின் செயலாளராகவும் பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக் கழகத்தின் செயற்குழு உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 180