பெயர் | தாமரைத் தீவான் |
தந்தை | சோமநாதர் |
தாய் | முத்துப்பிள்ளை |
பிறப்பு | 1932.07.24 |
ஊர் | திருகோணமலை, ஈச்சத்தீவு |
வகை | கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முத்துப்பிள்ளை, சோமநாதர் (1932.07.24 - ) திருகோணமலை, ஈச்சத்தீவைச் சேர்ந்த கவிஞர். இவரது தந்தை சோமநாதர்; தாய் முத்துப்பிள்ளை. தாமரைத் தீவான் என்னும் புனைபெயரைக் கொண்ட இவர் திருகோணமலை தாமரைவில் றோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் திருகோணமலை மூதூர் அந்தோனியார் றோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் கல்வி பெற்று 1955 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் இணைந்து கொண்டார். இவரது முதல் நியமனம் திருகோணமலை யோசப் கல்லூரி. 1972 ஆம் ஆண்டு அதிபர் தரத்திற்கு உயர்வு பெற்று 1987 இல் ஓய்வு பெற்றார்.
இவரது முதல் ஆக்கமான வெள்ளைப் பூனை சுதந்திரன் பத்திரிகையில் வெளியானதிலிருந்து ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகக் கவிதை, கட்டுரை, வில்லுப்பாட்டு என 500 இற்கும் மேற்பட்ட ஆக்கங்களை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் சுதந்திரன், வீரகேசரி, சுடர், சிந்தாமணி, சூடாமணி, தமிழ் உலகம் முதலான பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.
இவர் பிள்ளைமொழி, கீறல்கள், கட்டுரைப் பத்து, போரும் பெயர்வும், ஐம்பாலைம்பது, வள்ளுவர் அந்தாதி, முப்பத்திரண்டு, சிறு விருந்து, சோமம், எண் பா நூறு, ஐந்தொகை, இணைப்பு முதலான கவிதைத் தொகுப்புக்களை ஆக்கியுள்ளார். இவரது சேவையினைப் பாராட்டி இலங்கை அரசு 2004 ஆம் ஆண்டு 'கலாபூஷணம்' விருதை வழங்கிக் கௌரவித்துள்ளது.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 13943 பக்கங்கள் 149-151
- நூலக எண்: 10160 பக்கங்கள் 03