ஆளுமை:தவமணிதேவி, பாலராசா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தவமணிதேவி
தந்தை மயில்வாகனம்
தாய் பொன்னம்மா
பிறப்பு 1951.08.24
ஊர் முள்ளியவளை
வகை இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தவமணிதேவி, பாலராசா முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையில் பிறந்த இசைக்கலைஞர். இவரது தந்தை மயில்வாகனம்; தாய் பொன்னம்மா. ஆரம்பக் கல்வியை முள்ளியவளை சைவப் பாடசாலையிலும் உயர்க் கல்வியை மு/வித்தியானந்தக் கல்லூரியிலும் கற்றார்.

இவரின் கர்நாடக சங்கீத குரு செல்வி தங்கநாச்சி மயில்வாகனம். இவரிடம் சங்கீதம் கற்று இலங்கை சங்கீத சபையால் நடாத்தப்படும் பரீட்சையில் சித்தியடைந்து யாழ்ப்பாணம் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் இசைக்கலைமாணி பட்டம் பெற்றார். தொடர்ந்து ஆசிரியராக கடமையாற்றினார்.

நடன நிகழ்வுகளுக்கு பின்னணி இசையும் வழங்கியுள்ளார். ஆலயங்களில் திருவாசகம் முற்றோதல், பன்னிரு திருமுறைகள் முற்றோதல், வருடாந்தம் நடைபெறும் தியாகராஜ ஆராதனை போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார். 2000ஆம் ஆண்டு முதல் அறநெறிப் பாடசாலையின் பொறுப்பாசியராகவும் கடமையாற்றி வருகின்றார்.

விருதுகள்

இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம் இந்துமத அலுவல்கள் அமைச்சின் தேசிய சேவை மேன்மை விருது – 2016ஆம் ஆண்டு.

சாமஸ்ரீ விருது 2017 ஆம் ஆண்டு.

குறிப்பு : மேற்படி பதிவு தவமணிதேவி, பாலராசா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.