ஆளுமை:தம்பையா, சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுப்பிரமணியம் தம்பையா
தந்தை சுப்பிரமணியம்
தாய் சின்னாச்சி
பிறப்பு 1890
ஊர் கிளிநொச்சி, பூநகரி
வகை கூத்து கலைஞர்,வாத்தியக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தம்பையா, சுப்பிரமணியம் (1890 - ) கிளிநொச்சி, பூநகரி கறுக்காய்தீவைப் பிறப்பிடமாக் கொண்ட வாத்தியக்கலைஞர். இவரது தந்தை சுப்பிரமணியம்; தாய் சின்னாச்சி. சிறுவயதில் இந்தியா சென்று ஆர்மோனியம், மிருதங்கம் போன்ற வாத்தியங்களினை முறையாக கற்றுக் கொண்டதுடன் இந்தியாவின் முன்னணி நாடகக் கலைஞரான கிட்டப்பா போன்றவர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

கறுக்காய்த்தீவிற்க்கு திரும்பி வந்ததும் சிறீவள்ளி, அரிச்சந்திரா, அபிமன்னன் சுந்தரி, மார்க்கண்டேயர், சீதாகல்யாணம், அரிச்சந்திரா, கண்ணகி, கிருஷ்ணலீலா, சகுந்தலா, கிருஷ்ணன் தூது, பாஞ்சாலிசபதம், சேரன் செங்குட்டுவன், அல்லி அர்ஜுனா, பவளக்கொடி, தூதுக்கோர் துழாய் முடியோன் ,சம்பூர்ண இராமாயணம் என்று ஏராளமான நாடகங்களை பழக்கியதாக கறுக்காய்தீவு பெரியோர்கள் கூறுகின்றனர். தம்பையா அண்ணாவி அதி சிறப்பானவர். அந்தக் காலத்து பேப்பர் ஒன்றில் வந்த கதையினை சித்ராம்பரி சிங்க வீரன் எனும் தலைப்பில் கூத்து நாடகமாக எழுதி பழக்கி கறுக்காய்தீவில் மேடை ஏற்றினார். ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நாடகத்தை சிவராத்திரி, பொது நிகழ்வு அன்று கறுக்காய்தீவில் போட்டுக் கொண்டிருப்பார். ஆர்மோனியம், மிருதங்கம் ,உடுக்கு போன்ற தோல் வாத்தியக் கருவிகள் வாசிப்பதில் வித்தகராக திகழ்ந்தார். இந்தியாவில் பரதநாட்டியம் ஆடி தங்கப்பதக்கம் பெற்றதாக இவரைப் பற்றி பெரியவர்கள் பெருமையுடன் இன்றும் கூறுகிறார்கள். தம்பையா அண்ணாவி ஹிந்துஸ்தானியில் பாடும் திறன் கொண்டவராகவும் இந்தியாவில் இருந்து வரும் நாடக சபாக்கள் இதற்கு ஈடாக பாடும் வல்லமை கொண்டவராகவும் இருந்தார் என்று சித்தன் குறிஞ்சியை சேர்ந்த மாமா வேலுப்பிள்ளை சதாசிவம் கூறினார்கள்

கருக்காய் தீவு மக்கள் மனதில் மட்டுமன்றி அயல் கிரகங்களிலும் இன்றுவரை தம்பையா அண்ணாவின் திறமை கலைப்பணி நினைவில் நிலைத்து இருப்பதற்கு காரணம் அவருடைய காத்திரமான ஆற்றுகைகள் ஆகும்.