ஆளுமை:தம்பிமுத்து, தம்பிஐயா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தம்பிஐயா தம்பிமுத்து
தந்தை தம்பிஐயா
தாய் பொன்னம்மா
பிறப்பு 1904
ஊர் திருக்கோணமலை
வகை நாடகத்துறை சார் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இவர் திருக்கோணமலையின் தம்பலகாமம், நகரப்பகுதியில் வாழ்ந்த ஒரு நாடகத்துறை சார் கலைஞர் ஆவார்.

தம்பிஐயா, பொன்னம்மா ஆகியோருக்கு மூன்றாவது மகனாக 1904 ஆம் ஆண்டு தம்பிமுத்து யாழ்ப்பாணத்தில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியும், மேல் வகுப்பையும் யாழ்ப்பாணத்திலேயே கற்றதுடன், 1929 ஆம் ஆண்டு ஒரு நாடக கலைஞராக முதன் முதலில் மேடை ஏறினார். அந்த மேடையில் இவருடன் சேர்ந்து நடித்தவர்கள், நெல்லியடி இலங்கை திலகம் ஆழ்வாப்பிள்ளை என்பவரும் ஒருவர். இந்த நாடகத்தை நெறிப்படுத்தியவர் ஆனாத்தெரியாத அண்ணாவி சின்னத்துரை ஆவார். இவ்வாறு ஆரம்பமான இவரது நாடக பயணம், சந்ததி கடந்தும் செல்ல போவது, இவர் அப்பொழுது அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இவர் காதல் திருமணம் செய்து கொண்டதுடன், ஒரு பெண் பிள்ளையாக செல்வராணியையும், ஆண் பிள்ளையாக அமரசிங்கம் அவர்களையும் பெற்றார். திருக்கோணமலையை நோக்கி இடம்பெயர்ந்து, தனது கலை பயணத்தை திருக்கோணமலையில் ஆரம்பித்து இருந்தார். 1943 ஆம் ஆண்டு தம்பலகாமத்தில் உள்ள வண்ணார் மேட்டுத்திடலில் சமயம்மான் கோவிலடியில் "சதி அனுசியர்" நாடகத்தில் பார்வதி அம்மனாக நடித்தார். இவர் ஒரு நகைச்சுவை வெளிப்பாடு உடைய நடிகராகவும் பபூன் வேஷங்களில் நடித்துள்ளார்.

மேலும் நடிப்பு துறைக்கு அப்பால் நாடகங்களின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

"தூக்குத் தூக்கி", "வள்ளி திருமணம்" போன்ற நாடகங்களை தயாரித்து மேடையேற்றி உள்ளார். இவ்வாறு சிறந்த ஒரு நாடகக் கலைஞராக இருந்த தம்பிஐயா தம்பிமுத்து அவர்கள் அவர்களின் கலை பயணம் அவரது மகன் அமரசிங்கம் எனும் சித்தி அமரசிங்கமூடாக நீண்ட காலம் தொடர்ந்தது என்பதில் மாற்று கருத்து இல்லை.