ஆளுமை:தம்பிஐயா, நாகலிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தம்பிஐயா
தந்தை நாகலிங்கம்
தாய் மீனாட்சி
பிறப்பு 19939.06.16
இறப்பு 2019.11.23
ஊர் கிளிநொச்சி
வகை சமூகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தம்பிஐயா, நாகலிங்கம் (1939.06.16 - 2019.11.23) கிளிநொச்சியைச் சேர்ந்த சமூகவியலாளர். இவரது தந்தை நாகலிங்கம்; தாய் மீனாட்சி. இவர் பள்ளிப் பருவம் எய்தவே சுப்பிரமணியம் வித்தியாசாலையில் வித்யாரம்பம் செய்து வைத்தனர்.

இவர்களின் குடும்பம் வேளாண்மை தொழிலையே தம் தொழிலாகக் கொண்டிருந்தமையால் 1952ஆம் ஆண்டு குடியேற்றத்துடன் முரசுமோட்டை என்னும் நகரில் குடியேறினர். மணப்பருவம் கைகூடிம்வர அமரர் தம்பியை ஐயா அவர்களுக்கு அவரது தாய்மாமன் அமரர் வேலுப்பிள்ளை ராமாசிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட மகளான வள்ளியம்மை என்பவரை 1969 ஐப்பசி 29 ஆம் திகதி அக்கினி சாட்சியாக மாங்கல்யதாரணம் செய்துவைத்தனர். சத்தியசீலன், சோதிநாதன், லோகேஸ்வரன், மோகனவியிதா போன்றோர் இவரது பிள்ளைகளாவர்.

இலங்கை அரசின் நீதி அமைச்சால் 1983 ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி சமாதான நீதவான் பதவியும் இவருக்கு கொடுக்கப்பட்டு சத்தியப்பிரமாணம் நடைபெற்றது. 1984 ஆம் ஆண்டுகளில் இருந்து இடப்பெயர்வு வரையான காலப்பகுதிகள் வரை கரைச்சி தெற்கு கிழக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவராகவும், உறுப்பினராகவும் சிறப்பாக செயல்பட்டு எல்லோராலும் மதிக்கக்கூடிய நேர்மை விசுவாசம் தன்னம்பிக்கை உள்ள மனிதராக வாழ்ந்தார். ஆரம்பகால வட்டக்கச்சி கமக்காரர் அமைப்பின் தலைவராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.