ஆளுமை:தனிகாசலம், கதிரமு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தனிகாசலம்
தந்தை கதிரமு
தாய் கமலாம்மா
பிறப்பு 1959.12.10
இறப்பு 2013
ஊர் பூநகரி
வகை நாடகக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தனிகாசலம், கதிரமு (1959.12.10 - 2013) யாழ்ப்பாணம், நெடுந்தீவை பிறப்பிடமாகக் கொண்ட நாடகக்கலைஞர். இவரது தந்தை கதிரமு; தாய் கமலாம்மா. இவர் கிளிநொச்சி, பூநகரியில் வசித்து வந்தார். தன்னுடைய ஆரம்பக்கல்வி தொடக்கம் சாதாரணதர கல்வி வரை நெடுந்தீவு பரமேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கற்றார். தொடர்ந்து தந்தை வழி பண்டிதராக விளங்கிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை என்பவரிடம் தமிழை விரும்பி கற்றார்.

நல்ல சத்தமானவர் தனிகாசலம் ஐயா. கோயிலில் விடிய விடிய அம்மானை, ஒப்பாரி என்பவற்றை படிப்பார். மரண வீடுகளில் ஒப்பாரி பாடுவார். தவக்காலத்தில் கிறிஸ்தவ ஆலயங்களில் ஏழு வெள்ளிக் கிழமைகள் பசாம் படிப்பார். ஆலய திருவிழாக்களில் கவி பாடுவதில் ஆர்வமிக்கவர். ஆண்டவர் மரித்த பெரிய வெள்ளி அன்று இரவு முழுவதும் அம்மானை பாடுவதில் முக்கிய பங்கு வகித்தார்.

தனிகாசலம் ஐயா அவர்கள் 54 வயது நிரம்பியவராக 2013 ஆம் ஆண்டு இறைபதம் அடைந்தார்.