ஆளுமை:ஞானாம்பிகைதேவி, குலேந்திரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஞானாம்பிகைதேவி
தந்தை சிவசுப்பிரமணியம்
தாய் வீரலட்சுமி
பிறப்பு 1936.11.23
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்கள், கலைஞர்கள்

ஞானாம்பிகைதேவி, குலேந்திரன் (1936.11.23) யாழ்ப்பாணத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சிவசுப்பிரமணியம்; தாய் வீரலட்சுமி. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைமாணிப்பட்டத்தையும் கல்விப்பின் டிப்ளோமாவையும் கோயிற்கலை தொடர்பாக முதுமாணிப்பட்டத்தையும் முடித்துள்ளார்.

இவர் வேம்படி மகளிர் கல்லூரி ஆசிரியராகவும் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் தஞ்சாவூர் பல்கலைக்கழக நுண்கலை ஆராய்ச்சித்துறை பேராசிரியராகவும் புதுடில்லி பல்கலைக்கழக மானியக்குழு பெருந்திட்ட முதன்மை ஆராய்வாளராகவும் கடமையாற்றியுள்ளார். தெய்வத் தமிழிசை எனும் இவரின் நூல் தமிழக அரசின் சிறப்பு நூற்பரிசு பெற்றுள்ளது. பரத இசை மரபு, காரைக்காலம்மையார் தென்னிந்திய இசையின் தாய் என்ற ஆய்வு நூல் 8ஆம் உலக தமிழராய்ச்சி மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம், சென்னை, பாண்டிச்சேரி, மதுரை, காமராசார், மைசூர், கேரளா, ஆந்திரா, காலடி சங்கராசாரியர், தஞ்சாவூர் ஆகிய பல்கலைக்கழகங்களில் ஆலோசகராயும் கலாநிதிப் பட்டப்படிப்பு நெறியாளராயும், பாடத்திட்டக்குழுத் தலைவராயும், பரீட்சைக்குழுத் தலைவராயும் , தேர்வாளராயும் இருந்துள்ளார்.

விருதுகள்

இயலிசைப் பேரறிஞர்

The woman of the year 2003

இசை இயல் வித்தகர்

தெய்வத் தமிழிசை அரசி

தமிழர் பண்பாட்டுத் தூதுவர்