ஆளுமை:ஞானசேகரம், அப்புக்குட்டி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஞானசேகரம்
தந்தை அப்புக்குட்டி
தாய் நல்லம்மா
பிறப்பு 1965.09.21
ஊர் குமுழமுனை
வகை சமூகப்பணி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்புக்குட்டி ஞானசேகரம் மட்டுவில் வடக்கு 21.09.1965 பிறந்தார், 1-3 வரை மட்டுவில் மகா வித்தியாலயத்திலும், தொடர்ந்து குமுழமுனை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், நாச்சிக்குடா தமிழ்க் கலவன் பாடசாலையிலும் (தற்போது இப்பாடசாலை நாச்சிக்குடா முஸ்லிம் தமிழ்க் கலவன் பாடசாலை) உயர்தரம் வரை கல்வி கற்றார். 1972 ஆம் ஆண்டு குமுழமுனைக்கு வந்தார். இவரது தந்தை அந்தரக்காவடி ஆடுவதில் சிறந்து விளங்கியதுடன் ஆயுர்வேத வைத்தியம் மற்றும் சோதிடம், வீட்டிற்கு நிலையம் எடுத்தல், விஷகடி, இசைக்கருவிகளை மீட்டுதல் ஆகியவற்றில் சிறந்து விளங்கியமையால் இவருக்கும் இதில் ஆர்வம் உண்டு. இவர் வியாபாரத்தில் ஈடுபடுவதுடன் அறநெறி சேவைகளிலும், கிராம மட்ட அமைப்புக்களுடன் இணைந்து சமூக சேவையிலும் ஈடுபட்டார். பாடசாலைக் காலத்தில் மாணவ மன்றத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். கிளிநொச்சி மாவட்ட சிக்கனக் கடன் கூட்டுறவுச் சங்கத்தில் 1995 ஆம் ஆண்டு பூநகரி தெற்கு சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் 19 சிக்கன கடனுதவுச் சங்கங்களின் கொத்தணிச் செயலாளராக இருந்தார். குமுழமுனை ஞானவைரவர் ஆலயத்தில் அறம் செய் அறக்கட்டளையின் ஊடாக சமூகப் பணியை மேற்கொண்டு வருகிறார். சமாதான நீதவானாகவும் இருக்கிறார். மிருதங்கம், மவுத் ஓகன் ஆகியவற்றை மீட்டுவதில் சிறந்து விளங்குகிறார். 2018 ஆம் ஆண்டில் சிறந்த அறநெறி ஆசிரியருக்கான இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் தேசியமேன்மை விருது வழங்கப்பட்டது.