ஆளுமை:ஜெயராசா, சபாரட்ணம்

நூலகம் இல் இருந்து
(ஆளுமை:ஜெயராசா, சபா. இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெயராசா
தந்தை சபாரட்ணம்
பிறப்பு 1940.02.07
ஊர் இணுவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயராசா, சபாரட்ணம் (1940.02.07 - ) யாழ்ப்பாணம், இணுவிலைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவர் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியிலும் கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் கல்வி கற்றார். இவர் தனது நண்பர்களுடன் இணைந்து இளம் எழுத்தாளர் சங்கத்தை நிறுவியதோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வியியற் துறை, நடனத்துறை ஆகியவற்றிற்குத் தலைவராகவும், கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவராகவும் கடமையாற்றினார்.

இவர் கலை, இலக்கியம், தத்துவம், விமர்சனம், அழகியல், கல்வி தொடர்பான ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் ஐந்நூறுக்கும் மேற்பட்ட நினைவுப் பேருரைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இவருக்குக் கொழும்புப் பல்கலைக்கழகத்தினால் முதுகலைமாணி, கலாநிதி, பேராசிரியர் ஆகிய பட்டங்களும் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தினால் Man of the Year 2004 என்ற பட்டமும் கொழும்பு தமிழ்ச் சங்கத்தால் சங்கச் சான்றோர் பட்டமும் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 76 பக்கங்கள் 180
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 47
  • நூலக எண்: 9962 பக்கங்கள் 12-16