ஆளுமை:ஜெயந்தி, சுகிர்தன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெயந்தி, சுகிர்தன்
தந்தை -
தாய் -
பிறப்பு 1973.10.30
இறப்பு -
ஊர் ஏழாலை
வகை நடனக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயந்தி, சுகிர்தன் (1973.10.30) யாழ்ப்பாணம், ஏழாலையில் பிறந்த நடனக் கலைஞர். பத்மினி செல்வேந்திரகுமார், சாந்தினி சிவநேசன் ஆகியோரிடம் இவர் நடனத்தை முறைப்படி கற்றார். அபிநயா கலாலயம் என்ற நடன மன்றத்தினை 1994ஆம் ஆண்டு ஆரம்பித்து பல கலை நிகழ்ச்சிகளை இவர் வழங்கி வருகின்றார்.

வலி தெற்கு பிரதேச கலாசார விழாக்களின் போதும், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு போன்ற இடங்களில் நடாத்தப்பட்ட தமிழ் இலக்கிய விழாக்களின் போதும், அநுராதபுரம், ஒலுமடுவிலும், அம்பாறையிலும் நடைபெற்ற தேசத்தின் மகுடம் கண்காட்சியின் போதும் மேலும் பல விழாக்களின் போதும் கோயில் நிகழ்வுகளிலும் அறநெறி விழாக்களிலும் இவரது நிகழ்ச்சிகள் நடைபெறுவதோடு பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

2012ஆம் ஆண்டு வலி தெற்கு உடுவில் பிரதேச செயலக கலாசாரப் பேரவை ஞான ஏந்தல் விருதினையும், வட இலங்கை சங்கீத சபை கலா வித்தகர் கௌரவ விருதினையும், ஏழாலை முத்தமிழ் மன்றமும் சனசமூக நிலையமும் இணைந்து யுககலாபாரதி எனும் விருதினையும் இவருக்கு அளித்து கௌரவப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 64150 பக்கங்கள் 72