ஆளுமை:ஜூலியன் ஆனந்தரமணன், ஜூலியன் புஷ்பராசா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜூலியன் புஷ்பராசா ஜூலியன் ஆனந்தரமணன்
தந்தை ஜூலியன் புஷ்பராசா
தாய் ராசவதி
பிறப்பு 1974.05.11
ஊர் திருக்கோணமலை
வகை திரைப்படத்துறை சார் செயற்பட்டாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜூலியன் புஷ்பராசா ஜூலியன் ஆனந்தரமணன், 1974 ஆம் ஆண்டு மே மாதம் 11-ம் திகதி மன்னாரில் ஜூலியன் புஷ்பராசா மற்றும் ராசவதி ஆகியோருக்கு பிள்ளையாக பிறந்தார். 1983ம் ஆண்டில் மன்னாரில் இருந்து திருக்கோணமலைக்கு இவர் தனது குடும்பத்துடன் இடம்பெயர்வுக்கு உட்பட்டார். திருக்கோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் தனது ஆரம்ப காலகட்ட கல்வியை கற்றதுடன், நாட்டு சூழ்நிலைகள் காரணமாக தனது கல்வியை மேலும் ஐந்து கல்லூரிகளில் கற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.

இவர் நாடகத் துறை சார்ந்த ஒரு கலைஞர், ஒப்பனை கலைஞர், திரைப்படத்துறை சார் கலைஞர், செயற்பாட்டாளர் என பல வடிவங்களில் தனது ஆளுமைகளை வெளிப்படுத்தி வருகின்றார். ஈழத்து சினிமா துறையில் பெயர் குறிப்பிடக் கூடிய இயக்குனராகவும், சினிமா துறையின் வளர்ச்சிக்காக பெரிய பங்காற்றிக் கொண்டிருக்கும் ஒருவராகவும் திகழ்கின்றார்.

மண்சோறு, Needs, The Sixth Land, Ticket Please என பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் தேசிய ரீதியில் பல விருதுகளையும் திரைப்படத்துறைக்காக பெற்ற புகழ்மிக்க ஒரு திரைப்பட துறைசார் செயற்பாட்டாளர் ஆவார்.

இவரது ஆரம்ப காலகட்டங்களில் நாடகத்துறையில் சிறப்புமிக்க பல நாடகங்களை திருக்கோணமலை மற்றும் தேசிய ரீதியிலும் பல மேடைகளில் அரங்கேற்றியுள்ளார். அத்துடன் பல நாடகங்களில் கதாபாத்திரங்களாகவும் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ள ஒரு பல் திறமை உடைய கலைஞராவார்.

இவர் ஜபார், நந்தினி சேவியர், வில்வரட்ணம் போன்ற பல புகழ்மிக்க கலைஞர்களுடன் பணியாற்றிய அனுபவம் மிக்க ஒருவர். ஏணிப்படிகள் என்ற நாடகத்தை திறமையுடன் மேடை ஏற்றியுள்ளார். இவர் தனது கலைத்துறை சார் கற்கைகளை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பல்வேறு நிறுவனங்கள் ஊடாக கற்றுள்ளார்.