ஆளுமை:ஜயந்தி, திஸாநாயக்க

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜயந்தி
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்

ஜயந்தி, திஸாநாயக்க யாழ்ப்பாணம நல்லூரில் பிறந்த கலைஞர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இராமநாதன் நுண்கலை பிரிவில் இசைக் கலைமணி பட்டம் 1985ஆம் ஆண்டில் பெற்ற இவர் இசைபட்டதாரியாக 2002ஆம் ஆண்டு பெற்றார். கிழக்கு பல்கலைக்கழக கலைதுறைப்பட்டதாரியாகக கற்கையைத் தொடர்ந்து முதுநுண்கலைமாணி மாணவி.

”விமோசனா” 1998இல் கிழக்கிலங்கை அவைக்காற்றுக் கலைக்கழகத்தின் துணை இயக்குனராவார். இது கலை ஆர்வம் மிகுந்த ஒரு குழுவினரின் ஒருங்கிணைப்பகத் திகழ்ந்தது. விமோசனம் தரமான நிகழ்வுகளையும் கலைஞர்களையும் இணைத்துச் செயற்படும் அமைப்பாகும். பிரபல இசை வித்துவான்களுக்கு பிரபல நடனக் கச்சேரிகளுக்கும் 1989ஆம் ஆண்டில் இருந்து வயலின் அனுசரணைக் கலைஞராக உள்ளார். இசைத்துறை சார் இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார். வயலின்: அரங்கிசைக் கருவிகளுள் வயலின் இசைக் கருவி எனும் நூலையும் இவர் வெளியிட்டுள்ளார்.