ஆளுமை:சோமகாந்தன், நாகேந்திர ஐயர்
பெயர் | சோமகாந்தன் |
தந்தை | நாகேந்திர ஐயர் |
பிறப்பு | 1934.01.14 |
இறப்பு | 2006.04.28 |
ஊர் | கரணவாய், கலட்டி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சோமகாந்தன், நாகேந்திர ஐயர் (1934.01.14 - 2006.04.28) யாழ்ப்பாணம், கலட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை நாகேந்திர ஐயர். தனது ஆரம்பக் கல்வியைக் கரணவாய் குருக்கள் பாடசாலையில் ஆரம்பித இவர், இடைநிலைக் கல்வியைக் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் பின்னர் உயர் கல்வியைத் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியிலும் கற்றார். இவரின் எழுத்துப்பணிக்கு விக்னேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்கும் காலமே வித்திட்ட களமாக அமைந்தது. இவர் கலாமதி, கலைப்பித்தன், கருணையூர்ச்சோமு ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார்.
இவர் நிலவோ நெருப்போ (சிறுகதைத் தொகுதி), விடிவெள்ளி பூத்தது (நாவல்), ஈழத்து இலக்கிய வரலாறு - பல்துறை நோக்கு (ஆய்வு), பொய்கை மலர் (நாவல்), நிகழ்வுகளும் நினைவுகளும் - காந்தன் கண்ணோட்டம், தத்துவச் சித்திரங்கள் (வானொலி உரைகள்), ஆகுதி (சிறுகதைத் தொகுதி), ஈழத்தமிழருக்கு ஏன் இந்த வேட்கை?, Lanka and Ramayanam, Ancient Temples of Shiva in Sri Lanka போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார்.
இவருக்கு இவரின் இலக்கியப் பணியைக் கெளரவித்துத் திருகோணமலை இலக்கிய நண்பர்களினால் இலக்கியக் குரிசில் பட்டம் 1991 இல் வழங்கப்பட்டதோடு, இலங்கைக் கலாச்சார அமைச்சு தமிழ்மொழிக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் இவர் வழங்கிய சேவையைப் பாராட்டித் 'தமிழ் ஒளி' என்னும் பட்டத்தை 1994 இல் வழங்கிக் கெளரவித்தது.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 300 பக்கங்கள் 130-131
- நூலக எண்: 7571 பக்கங்கள் 46
- நூலக எண்: 13844 பக்கங்கள் 198-201
- நூலக எண்: 2028 பக்கங்கள் 29-30
- நூலக எண்: 2055 பக்கங்கள் 31-40
- நூலக எண்: 2056 பக்கங்கள் 30-39