ஆளுமை:செல்விகா, சகாதேவன்
பெயர் | செல்விகா |
தந்தை | தர்மராசா |
தாய் | செல்வமலர் |
பிறப்பு | 1969.10.13 |
ஊர் | யாழ்ப்பாணம் பருத்தித்துறை |
வகை | ஓவியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செல்விகா, சகாதேவன் (1969.10.13) யாழ்ப்பாணம் பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிவிடமாகவும் கொண்டவர். இவரின் தந்தை தர்மராசா; தாய் செல்வமலர். இவர் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் கல்வி கற்றார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். சுவாமி விபுலானந்தா இசை நடனக் கல்லூரியில் வயலின் டிப்ளோமா கற்கையின் மூலம் இசைக் கலைமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். வயலின் இசைக்கச்சேரி மூலம் பல மேடைகளைக் கண்டவர். வட இலங்கை சங்கீத சபையின் பரீட்சையில் ஆறாம் தரத்தில் சித்தியடைந்து கலாவி்த்தகர் பட்டம் பெற்றார். செயற்றிட்ட டிப்ளோமா, உளவியல் டிப்ளோமா, மனித வள முகாமைத்துவ டிப்ளோமா ஆகிவற்றையும் கற்றுள்ளார்.
We can பெண்கள் செயற்பாட்டுக் குழு உறுப்பினர் ஆகவும், New Arrow women organization தலைவராகவும், Batticaloa Befrienders ணிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார். 2014ஆம் ஆண்டு முதல் Terredess homes lousan சுவிட்சர்லாந்த்து நிறுவனத்திலும், சமுத்தான (Uk Kings college Truma) நிறுவனத்திலும் கடமையாற்றியுள்ள இவர் 2011ஆம் ஆண்டு முதல் மது/போதைப் பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு நிலையம் ஒன்றை நிறுவி (விமோச்சனா இல்லம்) அதன் நிறைவேற்றுப் பணிப்பாளராக சேவையைத் தொடருகின்றார்.
இளம் மகளீர் கிறிஸ்தவ ஒன்றியத்தின் பொருளாளராகவும், செயலாளராகவும் செயற்பட்டார். வின்சன்ட் மகளீர் உயர்தர தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளராகவும் மட்டக்களப்பு புளியந்தீவு மெதடிஸ்த தேவாலயத்தின் பெண்கள் சங்க செயலாளராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். அகில இலங்கை சமாதான நீதவானாகவும் இருந்து சமூக சேவைகள் செய்து வருகிறார்.
விருதுகள்
சிறந்த சமூக சேவகர் 2016 , 2017
தேச கீர்த்தி விருதுகள்
தேசமானி விருதுகள்
Awarded by Leo club
Awarded by Lions club
Malar FM awarded for the social work
Women’s day awarded by Meesan Srilanka , Malar FM
ஐக்கிய நாடுகள் ஒன்றியத்தின் volunteer of the year 2018
குறிப்பு : மேற்படி பதிவு செல்விகா, சகாதேவன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.