ஆளுமை:செல்வநிதி தியாகராசா
பெயர் | செல்வநிதி தியாகராசா |
பிறப்பு | |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செல்வநிதி தியாகராசா ஈழத்துக் கவிஞரும், பெண்ணிலைவாதியும் ஆவார். இவர் செல்வி எனும் பெயரினால் பெரிதும் அறியப்பட்டவர். இவர் நாடக நெறியாளரும் நடிகையுமாவார். தோழி எனும் பெண் இலக்கிய இதழின் ஆசிரியராக செயற்பட்டார். ஈழத்து பெண் கவிஞர்களின் கவிக்குரலாக வெளியிடப்பட்ட சொல்லாத சேதிகள் என்ற தொகுப்பில் செல்வியின் கவிதைகள் வெளிவந்தன. செல்வியின் கவிதைகள் மனஓசை, மண், அரங்கேற்றம், ஓசை, நான்காவது பரிமாணம், சரிநிகர், திசை போன்ற இதழ்களிலும் வெளிவந்தன. சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுப்புக்களிலும் இடம்பெற்றன. யாழ் பெண்கள் ஆய்வு வட்டம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ அவை மற்றும் இலக்கியவட்டத்தின் உறுப்பினராகவும் இருந்தவர். இரண்டு நாடகங்களையும் எழுதியிருக்கிறார். "பூரணி இல்லம்" என்ற பெண்கள் மையத்தின் உறுப்பினராக இருந்தார். உலகப் புகழ்பெற்ற ‘Poetry International Award’ கவிதைக்கான சர்வதேச விருது செல்விக்கு சர்வதேச கவிஞர்கள், எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள் கூட்டமைப்பான Poets Essayists and Novelists (PEN) அமைப்பால் வழங்கப்பட்டது.
1991 .ல் இவர் கடத்தப்பட்டார்