ஆளுமை:செல்லையா, எஸ். கே.
பெயர் | செல்லையா |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | வர்த்தகர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செல்லையா, எஸ். கே. புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவர் புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தின் மீதும் கொழும்புக் கதிரேசன் ஆலயத்தின் மீதும் அளவில்லாத பக்தி கொண்டவர்.
புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவிலில் பஞ்சாயத்து அங்கத்தவராக இருந்த இவர், இக்கோவிலுக்கான இராஜகோபுரம் அமைப்பதற்கு முன்னின்று உழைத்தார். இக்கோயிலில் நவக்கிரகக் கோயிலை முதன் முதலில் அமைத்துக் கொடுத்தவரும் இவரே. அத்தோடு இவர் கால்நடைகள் மீது காருண்யம் கொண்டு அவை நீர் பருகுவதற்கு வசதியாகப் பல குளங்களை அமைத்துக் கொடுத்தார்.
இவரது சேவை புங்குடுதீவுக் கிராமத்துக்குள் மட்டும் நின்றுவிடாது கொழும்பிலும் தொடர்ந்தது. இவர் செக்கட்டித்தெரு கதிரேசன் கோவிலைப் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்ததோடு, அக்கோவிலின் உள் வீதியில் உள்ள வைரவர் கோவிலைத் தனது சொந்தச் செலவில் கட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 259-260