ஆளுமை:சென்றோச், பிரான்சீஸ்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சென்றோச்
தந்தை பிரான்சீஸ்
பிறப்பு 1939.01.06
ஊர் சுண்டுக்குளி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சென்றோச், பிரான்சீஸ் (1939.01.06 - ) யாழ்ப்பாணம், சுண்டுக்குளியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பிரான்சீஸ். இவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ், அ. சொக்கன், தாவீது அடிகள் ஆகியோரிடம் கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பி. ஜி. டி. ஜி. பட்டமும் பெற்ற இவர், யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆசிரியராகவும் பலாலி ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராகவும் பிரதி அதிபராகவும் கடமையாற்றினார்.

இவர் அரை நூர்றாண்டு காலமாகப் பத்திரிகைகளுக்கும் வார மலர்களுக்கும் ஆண்டு தோறும் புகழ்பூத்த பேரறிஞர்களை நினைவு கூறும் வகையில் சிறப்புக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். மேலும் பல நூல்களையும் மறைக்கல்வி கற்பித்தலில் கட்புல செவிப்புல சாதனங்கள் என்ற நூலையும் இயற்றியுள்ளார். இவரது சேவைக்காக யாழ்ப்பாண மாவட்ட நீதிபதி உயர்திரு வீ. சுப்பிரமணியமிடம் வெண்கல விருதைப் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 23