ஆளுமை:செந்தில்செல்வி, வாமனானந்தன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செந்தில்செல்வி
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம், உரும்பிராய்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செந்தில்செல்வி, வாமனானந்தன் யாழ்ப்பாணம் உரும்பிராயில் பிறந்த பெண் கலைஞர். இவர் இரட்டைச் சகோதரிகளின் ஒருவர். ஆரம்பக் கல்வியைக் உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாசாலையிலும் உயர்கல்வியை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியிலும் கற்றார். பாடசாலைக்காலத்திலேயே பரதநாட்டியம், பாட்டு, வீணைஇசை ஆகிய மூன்றையும் கற்றார்.

திருமதி தையல்சுந்தரம் பரந்தாமனிடம் வாய்ப்பாட்டும், நடனக்கலையை ஏரம்பு சுப்பையா மாஸ்டரிடமும் தொடர்ந்து வீணை இசையை இராமநாதன் நுண்கலைக் கலலூரியிலும் கற்றார். சென்னை அடையாறு அரசு இசைக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் வீணை இசையில் மேலதிக பயிற்சி வீணை வித்துவான் பட்டம் பெற்றார். பத்து ஆண்டுகள் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இசை ஆசிரியர் பயிற்சியை முடித்தார். பத்து ஆண்டுகள் புனித திரேசாள் வித்தியாலயத்தில் கடமையாற்றினார்.

1983ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் குடியேறினார். லண்டன் ஸ்ரீமுருகன் ஆலயத்தில் முதலாவது இசை ஆசிரியராகப் பணிபுரிந்த பெருமைக்குரியவர். உலகின் பல பாகங்களிலும் புகழ்பெற்றுள்ள லண்டன் சைவ முன்னேற்றச் சங்கத்தின் வீணை ஆசிரியையாக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கடமையாற்றி வருகிறார். ஐரோப்பிய நாடுகளில் இடம்பெறும் நடன இசை நிகழ்ச்சிகளுக்கு வீணை வித்துவானாக மாணவர்களின் இசை பரீட்சைகளுக்கு ஆசிரியராகவும் கடமை புரிந்து வருகிறார்.