ஆளுமை:செந்தில்செல்வன், றொஷானி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் றொஷானி
தந்தை செந்தில்செல்வன்
தாய் இராஜலக்ஷ்மி
பிறப்பு 1988.01.13
ஊர் யாழ்ப்பாணம்
வகை சிறுவர் இலக்கியம்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செந்தில்செல்வன், றொஷானி (1988.01.13) யாழ்ப்பாணம் வதிரி கரவெட்டியில் பிறந்த எழுத்தாளர், இவரது தந்தை செந்தில்செல்வன்; தாய் இராஜலக்ஷ்மி . ஆரம்பக் கல்வியை நெல்லியடி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையிலும் உயர் கல்வியை பருத்தித்துறை மெதடிஸ்த மிசன் பெண்கள் உயர்தர பாடசாலையிலும் கற்றார். கல்வி கற்கும் காலங்களிலேயே எழுதுவதில் ஆர்வம் காரணமாக பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதியுள்ளார். கட்டுரை, கவிதை, ஓவியம் வரைதலிலும் மிகவும் ஈடுபாடுடைய றொஷானி, பாடசாலை மட்டத்தில் பல போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப்பதக்கங்களையும் பரிசில்களையும் பெற்றுள்ளார். இலங்கை சட்டக்கல்லூரியில் சட்டத்துறையில் தனது உயர் கல்வியைப் பூர்த்தி செய்து உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். கொழும்பில் தனது சட்டத்தொழிலை மேற்கொண்டு வருகிறார். இவர் ஒரு மேடைப்பேச்சாளர், வீணை இசையிலும் மிகவும் ஆர்வம் கொண்டவர். தற்போது சிறுவர் தொடர்பான எழுத்து உலகில் Room To Read நிறுவனத்துடன் இணைந்து பயிற்சிப்பட்டறைகளில் ஈடுபடுவதுடன் சிறுவர்களுக்கான நூல்களையும் வெளியிட்டுள்ளார். பெண்கள் தொடர்பான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

படைப்புகள்

  • யார் கள்வர்
  • மிஞ்சியின் பயணம்
  • சின்னா முன்னா

குறிப்பு : மேற்படி பதிவு செந்தில்செல்வன், றொஷானி அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.