ஆளுமை:சுஹைதா, ஏ.கரீம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுஹைதா
தந்தை மஸ்ஹுர் ஆலிம்
தாய் பாத்திமா
பிறப்பு 1960.01.28
ஊர் அக்கரைச்சேனை,திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுஹைதா ஏ.கரீம் (1960.01.28) திருகோணமலை மூதூர் அக்கரைச்சேனையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை மஸ்ஹுர் ஆலிம்; தாய் பாத்திமா. திருகோணமலை மூதூர் புனித அந்தோனியார் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார். 1978ஆம் ஆண்டில் எழுத்துத் துறையில் பிரவேசித்தார் எழுத்தாளர் சுஹைதா.

கவிதை, கட்டுரை, சிறுகதை ஆகிய துறைகளில் தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார். இவரின் ஆக்கங்கள் தினகரன், மித்திரன், வீரகேசரி, நவமணி ஆகிய நாளிதழ்களிலும் உள்நாட்டு, வெளிநாட்டு வானொலிகளிலும் வெளியாகியுள்ளன. இலங்கை தொலைக்காட்சியில் இஸ்லாமிய கவியரங்குகளில் கலந்துகொண்டுள்ளார். இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில், மாதர் மஜ்லிஸ் தமிழ் சேவையில் பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி, ஒலிமஞ்சரி போன்றவற்றில் இவரின் ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. லண்டன் தமிழ் வானொலி கவிதை நிகழ்விலும் அவுஸ்திரேலிய முஸ்லிம் வானொலி நிகழ்ச்சியிலும் இவரது ஆக்கங்கள் வெளிவரும் அதேவேளை முகநூலின் ஊடாகவும் தனது ஆக்கங்களைத் தரவேற்றி வருகிறார். இவரின் தந்தையும் ஒரு எழுத்தாளராவார். தந்தையின் ஆக்கங்களை தொகுப்பாக்கி மொத்தமாக 52 குட்டிக்கதைகளை இணைத்து 2013ஆம் ஆண்டு ஒரு புத்தமாக மஸ்ஹும் மஸ்ஹுர் கதைகள் எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளார்.

விருது

20010ஆம் ஆண்டு கலைதீபம் பட்டம்.

திறமைக்கான தேடல் பட்டம் 2012ஆம் ஆண்டு.

கவிக்குயில் பட்டம்.

படைப்புகள்

வளங்கள்

  • நூலக எண்: 14492 பக்கங்கள் 18


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சுஹைதா,_ஏ.கரீம்&oldid=330165" இருந்து மீள்விக்கப்பட்டது