ஆளுமை:சுப்புச்சாமி, பொன்னுச்சாமி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுப்புச்சாமி
தந்தை பொன்னுச்சாமி
பிறப்பு 1933.04.05
இறப்பு 2004.10.05
ஊர் நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்புச்சாமி, பொன்னுச்சாமி| (1933.04.05 - 2004.10.05) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை பொன்னுச்சாமி. இவர் சிறுவயதில் தம் குலத்தொழிலான நாதஸ்வரம் பயில எண்ணித் தமிழகத்தின் திருப்பாம்புரம் என்னும் ஊரில் உள்ள பிரபல நாதஸ்வர வித்துவான் கோவிந்த சாமியிடம் ஐந்து வருடங்கள் இக்கலையைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். நாதஸ்வர இசையுடன் தவில், கஞ்சிரா, மிருதங்கம், கடம் என ஏனைய வாத்தியக் கருவிகளை வாசிக்கும் திறனும் பெற்று ஈழ நல்லூர் திரும்பினார்.

இவர் இருபத்தைந்து வருடங்கள் நல்லூர் கந்தன் ஆலயத்தில் இசைச் சேவை புரிந்துள்ளார். இவருக்கு ரசிக ரஞ்சன சபா மண்டபத்தில் பல வாத்திய இசை நிகழ்ச்சிகளை ஒரே மேடையில் செய்தமையால் சகல கலா வித்தகர் என்ற விருதும் இந்து குரு பீடத்தினால் இசை "ஞான கலாபமணி" என்ற விருதும் வழங்கப்பட்டது. இவரது திறமைக்காக இலங்கையின் தேசிய விருதான கலாபூஷணம் விருது இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 91