ஆளுமை:சுப்பிரமணியம், செல்லப்பா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுப்பிரமணியம்
தந்தை செல்லப்பா
பிறப்பு 1920.12.22
ஊர் நயினாதீவு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியம், செல்லப்பா (1920.12.22 - ) யாழ்ப்பாணம், நயினாதீவைப் பிறப்பிடமாகவும் வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக் கலைஞர். இவரது தந்தை செல்லப்பா. இவர் 1951 ஆம் ஆண்டிலிருந்து கர்நாடக சங்கீதம், நாடகம், புல்லாங்குழல் போன்ற துறைகளில் சேவையாற்றினார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபம், வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி ஆகிய இடங்களில் பாஞ்சாலி சபதம், கர்ணன், தேரோட்டியின் மைந்தன், அலெக்சாண்டர் போன்ற நாடகங்களை மேடையேற்றியுள்ளார். இவரது கலைச்சேவையைப் பாராட்டிச் சங்கீத பூஷணம் பட்டம் கிடைக்கப்பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 74-75