ஆளுமை:சுபிதா, வேலாயுதபிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுபிதா
தந்தை வேலாயுதபிள்ளை
தாய் கமலமணி
பிறப்பு 1989.06.28
ஊர் கிளிநொச்சி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுபிதா, வேலாயுதபிள்ளை (1989.06.28) கிளிநொச்சி, புளியம்பொக்கனையில் பிறந்த எழுத்தாளர். வேல்மகள் என்னும் புனைபெயரில் எழுதி வருகிறார். இவரது தந்தை எழுத்தாளர் வேலாயுதப்பிள்ளை; தாய் கமலமணி. ஆரம்ப, இடைநிலைக்கல்வியை கிளிநொச்சி கலவெட்டித்திடல் நாகேஸ்வர வித்தியாலயத்திலும், உயர் கல்வியை கிளிநொச்சி முருகானந்தாக் கல்லூரியிலும் கற்றார். பாடசாலைக் காலத்திலேயே எழுத்துத்துறையில் ஈடுபாடு கொண்டவராக சுபிதா காணப்பட்டார். ஊடகவியல்துறை சார்ந்த டிப்ளோமா முடித்துள்ளார். கவிதை, சிறுவர் கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாடகப் பிரதி எழுதுதல் ஆகியதுறைகளில் ஈடுபாடு இருந்தாலும் கவிதை எழுதுவதில் மிகவும் விருப்பம் கொண்டுள்ளார். இவரின் எழுத்துத்துறை பிரவேசத்திற்கு மிகவும் உறுதுணையாக இருப்பவர் இவரின் தந்தை எனத்தெரிவிக்கிறார் எழுத்தாளர். இவரின் சிறுகதைகள், கவிதைகள் மித்திரன், சுடர்ஒளி, தினப்புயல், தினமுரசு ஆகிய நாளிதழ்களில் வெளிவந்துள்ளன. கண்டாவளை கலாசாரப் பேரவை ஆண்டுதோறும் வெளியிட்டு வரும் வளை ஓசை மலரிலும் இவரின் ஆக்கம் வெளிவந்துள்ளது. நினைவுகளின் நினைவோடு என்னும் கவிதை நூலையும் இவர் வெளியிட்டுள்ளார். சமூகசேவையாளராகவும் தன்னை அடையாளப்படுத்தும் சுபிதா கண்ணகி கலாமன்றத்தின் பொருளாளராகவும் கண்டாவளை பிரதேச கலாசார அதிகார சபையின் பொருளாளராகவும் மாவட்ட காலாசார அதிகார சபையின் உறுப்பினராகவும் இருந்து சமூக சேவையை செய்து வருகின்றார்.


குறிப்பு : மேற்படி பதிவு சுபிதா, வேலாயுதபிள்ளை அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.