ஆளுமை:சுஜனி, தங்கராஜ்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுஜனி
தந்தை தங்கராஜ்
தாய் பரமேஸ்வரி
பிறப்பு 1986.12.15
ஊர் வவுனியா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுஜனி, தங்கராஜ் வவுனியாவில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை தங்கராஜ்; தாய் பரமேஸ்வரி. ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர் கல்வி வரை சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் கற்றார். ஏழாம் வகுப்பில் இருந்தே கவிதை, கதை, கட்டுரை, பேச்சு, வில்லுப்பாட்டு, மேடை நாடகம் போன்ற நிகழ்வில் பங்கு பெற்று சான்றிதழ்கள் பல பெற்றுள்ளார். இவர் பத்திரிகை, வானொலி, இணையங்கள் ஊடாகவும் கவிதை, கட்டுரை, எழுதி வருகிறார். இதுவரைக்கும் பதின்னைந்து பாடல்களை எழுதியுள்ளார் எழுத்தாளர் சுஜனி. அவற்றில் இரு பாடல்கள் இறுவெட்டுக்களாக வெளிவந்துள்ளன. இணையத்தில் பல கவிதை போட்டிகளில் பங்குபற்றி சான்றிதழ்களை பெற்றுள்ளார்.

விருதுகள்

கவிச்சிகரம், கவியரசி, பாடலாசிரியர் போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.


குறிப்பு : மேற்படி பதிவு சுஜனி, தங்கராஜ் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சுஜனி,_தங்கராஜ்&oldid=315419" இருந்து மீள்விக்கப்பட்டது