ஆளுமை:சுகந்தி, இராஜகுலேந்திரா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுகந்தி
தந்தை பத்மநாதன்
தாய் கனகம்மா
பிறப்பு 03.11.1962
இறப்பு -
ஊர் யாழ்ப்பாணம்
வகை சட்டத்தரணி, கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுகந்தி இராஜகுலேந்திரா (03.11.1962) யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையில் பிறந்தவர். இவரது தந்தை பத்மநாதன்; தாய் கனகம்மா. யாழ்ப்பாணம் மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையில் கல்வி கற்றுள்ளார். பாடசாலை கல்வி கற்கும் போதே நடனம், நாடகம், பேச்சு, கவிதைத் துறையென பல துறைகளில் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். சுகந்தி இராஜகுலேந்திரா அவர்கள். ஆசிரியர் தொழிலில் தன்னை இணைத்துக் கொண்டு இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தாயாரான பின்னர் சட்டத்தரணி ஆக வேண்டுமென்ற தனது கனவை நனவாக்க இலங்கை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று தற்பொழுது சட்டத்தரணியாக தனது தொழிலை மேற்கொண்டு வருகிறார். இவர் ஒரு நல்ல மேடைப் பேச்சாளராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டுள்ளார். இசை, நடனம் போன்ற துறைகளிலும் ஈடுபாடு அதிகம் என தெரிவிக்கிறார்.