ஆளுமை:சிவா கௌதமன், சண்முகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவபுண்ணியம்
தந்தை சண்முகம்
பிறப்பு
இறப்பு 2013.08.15
ஊர் இணுவில்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவபுண்ணியம், சண்முகம் ( - 2013.08.16) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை சண்முகம். இவர் சிவா கௌதமன் என்ற புனைபெயரால் அறியப்பட்டார். இவர் அளவெட்டி கூத்தன் சீமி ஞானோதய வித்தியாலயம், தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி, கொழும்பு தேசிய நுண்கலைக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார்.

அக்காலத்தில் தினகரன் ஆசிரியராக இருந்த கலாநிதி. க. கைலாசபதி இவரின் ஓவியத்தைப் பத்திரிகையில் வெளியிட்டு ஊக்குவித்து வந்தார். மேலும் ஜே. பி. டெக்ஸ்டயில்ஸ் புடவைகளுக்கு ஓவிய வடிவமைப்பாளராகக் கடமையாற்றி வந்துள்ளார். இவர் 1979 ஆம் ஆண்டு முதல் சுமார் கால் நூற்றாண்டு காலம் வெளிநாட்டில் மத்திய கிழக்கில் பிரபல நிறுவனங்களில் ஓவியராகவும் விளம்பர வடிவமைப்பாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் விளம்பரப் பட இயக்குனராகவும் கடமையாற்றியுள்தோடு, செ. யோகநாதன் ஆசிரியராக இருந்த புதுமை மாதாந்தக் கலை- இலக்கியச் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலும் கடமையாற்றியுள்ளார். தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் வெளியான சுமார் நூற்றுக்கும் மேலான புத்தகங்களுக்கு அட்டைப்படமும் வரைந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 14521 பக்கங்கள் 03