ஆளுமை:சிவலிங்கம், இரத்தினம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவலிங்கம்
தந்தை இரத்தினம்
தாய் செல்லத்தங்கம்
பிறப்பு 1933.03.28
ஊர் மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவலிங்கம், இரத்தினம் (1933.03.28) மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாயைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை இரத்தினம். இவரது தாய் செல்லத்தங்கம். இவர் சிவானந்த வித்தியாலயம், அரசினர் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றதுடன் புலவர் ஏ. பெரியதம்பிப்பிள்ளை, பண்டித வித்துவான் வி. சீ. கந்தையா ஆகியோரின் மாணவனாவார்.

இவர் மாஸ்டர் சிவலிங்கம் என்னும் புனைபெயரைக் கொண்டவர். இவர் தினமணி, சிந்தாமணிப் பத்திரிகைகளின் துணைப் பத்திராசிரியராகவும் இலங்கை வானொலியில் சிறுவர் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் இலங்கை ரூபவாஹினியில் சிறுவர் நிகழ்ச்சி நடத்துபவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் நகைச்சுவைப் பேச்சு, வில்லிசை, கதை கூறல், நாடகம் ஆகிய கலைகளில் ஈடுபாடு உள்ளவர். இவர் பயங்கர இரவு, அன்பு தந்த பரிசு ஆகிய படைப்புக்களை உருவாக்கியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 128-129