ஆளுமை:சிவபாலசுப்பிரமணியம், நவநீதம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவபாலசுப்பிரமணியம்
தந்தை நவநீதம்பிள்ளை
தாய் நாகம்மா
பிறப்பு 1950.08.03
ஊர் கிளிநொச்சி, திருநகர்
வகை பல்துறைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவபாலசுப்பிரமணியம், நவநீதம்பிள்ளை (1950.08.03 - ) யாழ்ப்பாணம், நெடுந்தீவை பிறப்பிடமாகக் கொண்ட பல்துறைக் கலைஞர். இவரது தந்தை நவநீதம்பிள்ளை; தாய் நாகம்மா. கிளிநொச்சி, திருநகர் பகுதியில் வசித்து வரும் இவர் தன்னுடைய ஆரம்பக்கல்வியை இடைக்காடு மகா வித்தியாலயத்தில் கற்றார்.

கோவலன் சரித்திரத்தை ஆலயங்கள் தோறும் சென்று படித்து வந்தார். இவர் தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து சென்று உடுக்கை அடித்து பாடுவார். கோவலன் கூத்து இவரது பரிணாம வளர்ச்சியாகும். 1980 ஆம் ஆண்டு இவர் காத்தவராயன் கூத்தினை பழக்கி அரங்கேற்றியமை குறிப்பிடத்தக்கது. 1979, 1980 ஆண்டுகளில் ஜோசப்பர், எஸ்தர் போன்ற கூத்துக்களிலும் 1981ம் ஆண்டில் யாக்கோப்பு, சந்தியாம் அவர்களின் அண்ணாவியத்திலும் நடித்துள்ளார்.

குழலடிப்பிள்ளையார், நெல்லண்டை பத்திரகாளி, மாமுனை நாகதம்பிரான், கச்சர்வெளிப்பிள்ளையார், நவினி வெளி அம்மன், அறத்திஅம்மன், அல்லிப்பளை, தம்பகாமம், மண்டான், புலோப்பளை மேற்கு பெரியபளை, முல்லையடி, வண்ணாங்கேணி ஆகிய இடங்களில் அண்ணாவியாக இருந்து மேடையேற்றம் செய்தார்.

இவரது கலை தொண்டிற்காக 2013ம் ஆண்டு கரைச்சி பிரதேச கலாச்சார பேரவையால் கரைஎழில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பல இடங்களில் பொன்னாடை போர்த்தியும் கெளரவிக்கப்பட்டார்.