ஆளுமை:சிவபாக்கியம், வேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவபாக்கியம்
தந்தை வேலுப்பிள்ளை
தாய் காரணிப்பிள்ளை
பிறப்பு 1970.04.01
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர், சமூகசேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவபாக்கியம், வேலுப்பிள்ளை (1970.04.01) அம்பாறை மாவட்டத்தின் கருங்கொடித்தீவில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை வேலுப்பிள்ளை; தாய் காரணிப்பிள்ளை. ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்கல்வி வரை கோலாவில் விநாயகர் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார். பாடசாலைக் காலத்திலேயே எழுத்துத்துறையில் ஆர்வம் கொண்ட இவர் கவிதை, கட்டுரை, சிறுகதைகள் மற்றும் உண்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட கதைகளை எழுதி வருகிறார். இவரின் ஆக்கங்கள் பெண் சஞ்சிகை, உதயசூரியன் நாளிதழ் போன்றவற்றில் பிரசுரமாகியுள்ளன. பெண்ணியவாதியான இவர் பல பெண்கள் அமைப்புக்களில் இணைந்து செயற்பட்டு வருகிறார். மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் சங்கம் போன்றவற்றின் ஊடாக பெண்களை வலுட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் உபதலைவியாகவும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான பயிற்சிகளுக்கு பெண்களை ஒன்றிணைத்தல் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறார். இயற்கை முறை விவசாயம் தொடர்பான பயிற்சியை இந்தியாவுக்குச் சென்று முடித்துள்ள சிவபாக்கியம் அப்பயிற்சியை இலங்கையில் உள்ள பெண்களுக்கு வழங்கியும் வருவதோடு நுண்கடனில் இருந்து பெண்கள் விடுபடுவதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

குறிப்பு : மேற்படி பதிவு சிவபாக்கியம், வேலுப்பிள்ளை அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.