ஆளுமை:சின்னப்பிள்ளை, நல்லதம்பி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சின்னப்பிள்ளை
தந்தை நல்லதம்பி
தாய் இராசமணி
பிறப்பு 1959.04.11
ஊர் எழுதுமட்டுவாழ்
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருமதி சின்னப்பிள்ளை குலவீரசிங்கம் எழுது மட்டுவாழில் பிறந்தார். (1959.04.11) இவர் இத்தாவில் பளையை வசிப்பிடமாக் கொண்டவர். ஆரம்பக் கல்வியை யா/ எழுதுமட்டுவாழ் சி.சி.த.க.பாடசாலையிலும் இடைநிலைக்கல்வியை கிளி/பளை மத்திய கல்லூரியிலும், உயர்கல்வியை யா/உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்திலும் பயின்றார். 1989 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆம் ஆண்டு வரை தொண்டர் ஆசிரியராகக் கடமை புரிந்து நியமனம் பெற்று 1996 ஆம் ஆண்டு வரை கிளி/வேம்போடுகேணி சி.சி.த.க. பாடசாலையிலே கற்பித்தார். 1996 ஆம் ஆண்டில் கிளி/திருவையாறு மகா வித்தியாலயத்தியாலயத்திலும், கிளி/இராமநாதபுரம் கிழக்கு அ.த.க.பாடசாலையிலும் கற்பித்தார். அதே ஆண்டில் கிளி/வேம்போடுகேணி அ.த.க.பாடசாலையில் கடமையேற்றார். நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழலினால் 2000 ஆம் ஆண்டு யாழ். வலயத்திலுள்ள யா/கோண்டாவில் இராமகிருஷ்ண வித்தியாலயத்திலும், கிளி/கிளாலி றோ.க.த.க. பாடசாலையிலும் , யா/ஓட்டுவெளி அ.த.க.பாடசாலையிலும் பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டு திரும்பவும் கிளி/வேம்போடுகேணி சி.சி.த.க. பாடசாலையிலே கடமையேற்றார்.அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இடப்பெயர்வின் காரணமாக யாழ். கல்வி வலயத்திலுள்ள யா/கோண்டாவில் இராமகிருஷ்ண வித்தியாலயத்திலும், யா/பரஞ்சோதி மகா வித்தியாலயத்திலும் ஆசிரியப் பண்யாற்றி வந்தார். கணணி, பல்லூடகம் போன்ற பயிற்சிகளைப் பெற்று சிங்கள பாடத்தினை யாழ் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாகக் கற்று வகுப்பு-3 தரத்தில் திறமைச் சித்தி பெற்றார். இறுதியாக கிளி/வேம்போடுகேணி சி.சி.த.க. பாடசாலையிலே 2014 ஆண்டும் கடமையேற்றார். இவரது ஆசிரியப் பணி காலத்தில் ஆரம்பக் கல்வி ஆசிரியராக இருந்தாலும் க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கு விவசாயம், சமயம், சிங்களம் ஆகிய பாடங்களைக் கற்பித்து வந்தார். அதிக எண்ணிக்கையான மாணவர்களை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெறச் செய்த பெருமைக்குரியவர். 2018 ஆம் ஆண்டில் நல்லாசிரியர் தெரிவில் ”குரு பிரதீபா பிரபா” விருது பெற்றுள்ளார்.