ஆளுமை:சாரதாதேவி, சிறிஸ்கந்தராசா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சாராதேவி
தந்தை விநாயகராஜா
தாய் நேசம்மா
பிறப்பு 1950.07.14
ஊர் மாதகல்
வகை எழுத்தாளர், கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சாரதாதேவி, சிறிஸ்கந்தராசா யாழ்ப்பாணம் மாதகலில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை விநாயகராஜா; தாய் நேசம்மா. ஆரம்பக்கல்வியை மாதகல் விக்னேஸ்வரா மகாவி்த்தியாலயத்திலும் பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியிலும் கற்றார். ஏரம்பு சுப்பையா பிள்ளை , செல்வி குமாரசுவாமி திரிபுரசுந்தரி ஆகியோரிடம் முறையாக நடனத்தைப் பயின்று பின்னர் இந்தியா சென்று பரதசூடாமணி அடையார் கே.லக்ஷ்மணனிடம் பரதநாட்டியம், நட்டுவாங்கத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளார்.

1972ஆம் ஆண்டு வீரசிங்கம் மண்டபத்தில் அமரர் அடையார் கே.லக்ஸ்மன் அவர்களின் நட்டுவாங்கத்துடன் இவரது நடனம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்றார். கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் பயிற்சியையும் இவர் முடித்துள்ளார். சகுந்தலை என்ற நாட்டிய நாடகத்தை தயாரித்துள்ளதுடன் நட்டுவாங்கமும் வழங்கியுள்ளார் அத்துடன் அன்னம் விடு தூது நாட்டிய நாடகத்திற்கு நெறியாளராகவும் நெறிப்படுத்தியுள்ளார். ரூபவாஹினி தொலைக்காட்சிக்கு பாடசாலைகள் மூலமாக பல நடன நிகழ்ச்சிகைளை வழங்கியுள்ளார்.

1980ஆம் ஆண்டு திருகோணேஸ்வரர் நாட்டியக் கலாமன்றத்தினை ஆரம்பித்தார். இதன் ஸ்தாபகரும் இவரேயாவார். வட இலங்கை சங்கீத சபை ஆரம்பிப்பதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்து மாணவிகளுக்கு பரீட்சைகள் நடாத்தியுள்ளார். மாணவர்களுக்காக நடனம் -1, நடனம் -2 ஆகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

விருதுகள்

திருகோணமலை சுப்பர் சங்கீத இசைக்கழகம் 30 வருட கலைப்பணியை பாராட்டி கௌரவித்து பாராட்டும் சான்றிதழும் 2004ஆம் ஆண்டு வழங்கியது.

அண்ணாமலைப் பல்கலைகழக மாணவர்களால் மட்டக்களப்பு விபுலானந்தா இசை நடனக் கல்லூரியில் கலைஞர்கள் கௌரவிப்பு விழாவில் கௌரவிப்பு.

கலைப்பண்பாட்டுக் கழகம் நடாத்திய இசை, நடன, நாடக விழாவில் ”நாட்டிய வித்தகி” விருது.

சக்தி தொலைக்காட்சியின் ”நாட்டிய வித்தகி” என்ற வாழ்நாள் விருதும் பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார் 2009. அரச விருது விழாவில் பரதநாட்டியத்திற்காக கலாபூஷண விருது 2012ஆம் ஆண்டு.

நாட்டியத்துறையில் 34 ஆண்டு சேவையை பாராட்டி நகர முதல்வர் விருதும் சான்றிதழும் கௌரவிப்பும் 2013ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், காணி, காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2013ஆம் ஆண்டு நடனத்துறைக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி வித்தகர் விருது.

2015ஆம் ஆண்டு அரச நடன விழாவில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கையில் நாட்டிய நாடகக் கலையை மிளிரச் செய்வதற்கு சேவையாற்றியமைக்காக ”நடனத் திலகம்” விருதும் ”நாட்டிய வாரிதி” விருதும் வழங்கப்பட்டது.

குறிப்பு : மேற்படி பதிவு சாரதாதேவி, சிறிஸ்கந்தராசா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.


வெளி இணைப்புக்கள்