ஆளுமை:சரவணபவானந்தன், வேலாயுதபிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சரவணபவானந்தன்
தந்தை வேலாயுதபிள்ளை
தாய் சின்னம்மா
பிறப்பு 1956.03.14
ஊர் கிளிநொச்சி,பாரதிபுரம்,
வகை இசை, நாடகம்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரவணபவானந்தன், வேலாயுதபிள்ளை (1956.03.14 -) யாழ்ப்பாணம், அச்சுவேலியை பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை வேலாயுதபிள்ளை;தாய் சின்னம்மா ஆகியோர் ஆவார். கிளிநொச்சி நகர குடியேற்றத்தின் பின்னர் இவர் பாரதிபுரம் என்னும் கிராமத்திற்கு குடியேறினார்.

இசை நாடகங்களை அழியவிடாது காத்துவரும் பெருமை இவருக்கு உண்டு. அத்தோடு வில்லுப்பாட்டு, பஜனை பாடுதலையும் பணியாகக் கொண்டவர். இவர் 1982 ஆம் ஆண்டு நடுகமணி வைரமுத்துவின் மயான காண்டம் நாடகத்தில் சந்திரமதியாக நடித்தார். அதன் பின்னர் நல்லதங்காள், சத்தியவான், வள்ளி திருமணம், மார்க்கண்டேயர், கோவலன் கண்ணகி போன்ற இசை நாடகங்களில் நடிகமணி வைரமுத்து செல்வராயா, நற்குணம் போன்ற இசைநாடகக் கலைஞர்களுடனும், பின்னர் அண்ணாவியராக தனது நெறிப்படுத்தலுடனும் இசைநாடகங்களை நடித்து வந்திருகின்றார்.

இவரது கலைச்சேவையை பாராட்டி 2013 ஆம் ஆண்டு மலையாளபுரம் கற்பக முத்துமாரி அம்மன் ஆலய தர்மகர்த்தா சபை பொன்னாடை போர்த்தி கெளரவித்தது, அத்தோடு 2014ஆம் ஆண்டு ஆளுனர் விருதும், இசைநாடகப் போட்டியில் பங்குபற்றி பாராட்டு சான்றிதழ்களையும் பெற்றார். இவரது கடந்த 30 வருடத்திற்கும் மேலான கலைச்சேவையினை பாராட்டி கரைச்சி பிரதேச கலாச்சார பேரவை 2014 ஆம் ஆண்டுக்கான கரைஎழில் விருது வழங்கி கெளரவித்தது.