ஆளுமை:சந்திரிக்கா, பரமநாதன்
பெயர் | திருமதி சந்திரிக்கா அருள்ராஜா |
தந்தை | பரமநாதன் |
தாய் | சறோயினிதேவி |
பிறப்பு | 1980-10-22 |
ஊர் | கிளிநொச்சி, வட்டக்கச்சி |
வகை | பரத நாட்டியக்கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
திருமதி சந்திரிக்கா, பரமநாதன் (1980.10.22) கிளிநொச்சி, வட்டக்கச்சியை வசிப்பிடமாக கொண்ட பரத நாட்டிய ஆசிரியர் ஆவார். தந்தை பரமநாதன்; தாய் சறோயினிதேவி. இவரது ஆரம்பக்கல்வி மற்றும் உயர்தரக்கல்வியை கிளிநொச்சி வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தில் பயின்றார். உயர்கல்வியின் பின் பல்கலைக்கழகம் கிடைக்கப்பெற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடனத்துறையில் கற்றார்.
2009 ஆம் ஆண்டு தை மாதம் 10 ஆம் திகதி பட்டதாரி நியமனம் கிடைத்தது. தொடர்ந்து ஆசிரியர் நியமனம் கிளிநொச்சி இராமநாதபுரம் மேற்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கிடைக்கப்பெற்றது. பின்னர் தான் கல்வி பயின்ற பாடசாலையான கிளிநொச்சி வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தில் ஆசிரியைப் பணியை தொடர்ந்தார். 2016 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை (2021) கிளி/வட்டக்கச்சி மகா வித்தியாலத்தில் நடன ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார்.
கிளி/வட்டக்கச்சி மகா வித்தியாலயம் தற்போது பெயர் மாற்றப்பட்டு கிளி/வட்டக்கச்சி மத்திய கல்லூரி என திகழ்கின்றது. வட்டக்கச்சியில் தானாக முன்வந்து 2012 ஆம் ஆண்டு நடன கல்லூரி ஒன்றை நிறுவி நடத்தி வருகிறார். அதன் பெயர் பிரமாலயா கலைக்கல்லூரி ஆகும். 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை (2021) ஆறுமுகம் வீதி கந்தசாமி கோயில், மாவடி அம்மன் ஆலயம், வட்டக்கச்சி சோதி விநாயகர் ஆலயம், பன்னங்கண்டி பிள்ளையார் கோவில், பாமடி பிள்ளையார் கோவில் போன்ற ஆலய திருவிழாக்களின் போது நடன நிகழ்வுகள் சொந்த நெறிப்படுத்தலில் ஆற்றுகை செய்துள்ளார். பாடசாலை காலத்தில் 2013, 2014, 2015 ஆம் ஆண்டுகளில் தமிழ் சங்கம் நடத்திய நடன போட்டிகளில் மாணவர்களை ஆற்றுகைப்படுத்தி முதல் இடத்தினையும் பெற்று கொண்டமை குறிப்பிடத்தக்கது. தமிழ் தினப் போட்டியில் 2015 ஆம் ஆண்டு முதல் இடம் கிடைக்கப்பெற்றது. இது அவருக்கு மட்டுமன்றி பாடசாலைக்கும் பெருமையை சேர்த்தது. பாடசாலைகள் மட்டுமன்றி ஆறுமுகம் வீதி கந்தசாமி கோயில் அறநெறிப்பாடசாலை மாணவர்களை தேசியம் வரை கொண்டு சென்றதில் இவர் பங்கும் உள்ளது. இவர் இணையம் ஊடாகவும் நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.