ஆளுமை:சந்திரமதி, சிவானந்தன்
பெயர் | சந்திரமதி, சிவானந்தன் |
பிறப்பு | 1942.03.22 |
ஊர் | திருநெல்வேலி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சந்திரமதி, சிவானந்தன் (1942.03.22 - ) யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர், ஆசிரியர். இவர் வட இலங்கை சங்கீத சபைப் பரீட்சையில் வாய்ப்பாட்டு, வயலின் ஆகியவற்றின் ஆசிரியர் தரச் சான்றிதழ் பெற்றுக் கலாவித்தகர் ஆனதோடு கல்விப் பொதுத்தராதரப் பரீட்சையில் சித்தி பெற்றுப் பின்னர் பயிற்றப்பட்ட ஆசிரியராக நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியுள்ளார்.
இவர் ஈழத்தின் தலை சிறந்த சங்கீத வித்துவான்களான இசைப்புலவர் சண்முகரத்தினம், சங்கீதபூஷணம் ரி. இராசலிங்கம், சங்கீதபூஷணம் லயனஸ் திலகநாயகம்போல், வயலின் வித்துவான் பிரம்மஶ்ரீ சர்வேஸ்வரசர்மா ஆகியோரின் மாணவியாக இருந்து முறைப்படி சங்கீத இசையைக் கற்றுத் தேறினார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், யாழ்ப்பாணத்தில் உள்ள பல்வேறு கலாமன்றங்கள் பலவற்றிலும் தனது இசைக் கச்சேரியை வழங்கியுள்ளார். இவர் 1968 ஆம் ஆண்டு கீதாஞ்சலி சங்கீத இசைக் கல்லூரியை ஆரம்பித்து வைத்தார்.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 96
- நூலக எண்: 15444 பக்கங்கள் 58