ஆளுமை:சண்முகம், குமாரசாமி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சண்முகம்
தந்தை குமாரசாமி
தாய் சந்தனம்
பிறப்பு 1956.09.03
ஊர் களுவன்கேணி, மட்டக்களப்பு
வகை ஒய்வுநிலை அதிபர், வித்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சண்முகம் குமாரசாமி(1956.09.03) மட்டக்களப்பு, வந்தாறூமூலையைச் சேர்ந்த ஒய்வுநிலை அதிபர் மற்றும் வித்தகர். இவரது தந்தை குமாரசாமி; தாய் சந்தனம். இவரது மனைவி நல்லம்மா . தனது ஆரம்பக் கல்வியினை களுவன்கேணி மெதடிஸ்த மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையிலும், உயர் கல்வியினை வந்தாறூமூலை மத்திய மகா வித்தியாலயத்திலும் கற்றார். பின்னர் கிழக்குப்பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலைமாணி மற்றும் முதுகலைமாணி பட்டத்தினை தமிழ்த்துறையில் பெற்றுக்கொண்டார். அத்துடன் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா மற்றும் பட்டப்பின் விசேட கல்வி டிப்ளோமா ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து உளவியல் துறை டிப்ளோமாவையும் பெற்றுள்ளார்.

இவர் முதலாவதாக மட்/களுவன்கேணி மெதடிஸ்த மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றினார். தொடர்ந்து மட்/ சிங்காரத்தோப்பு சரஸ்வதி வித்தியாலயம், மட்/ சித்தாண்டி அலைமகள் வித்தியாலயம் மற்றும் மட்/களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்திலும் 27 வருடங்கள் வரை அதிபராகக் கடமையாற்றி கடந்த 2016 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதுவரை வேடர் சமூகம் சார்ந்து பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றின் தொகுப்பாக 2019 ஆம் ஆண்டு “களுவன்கேணி வேடுவப்பரம்பரையினரின் வழக்காறுகள்” எனும் தலைப்பில் புத்தகம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அத்துடன் இவர் சோதிடம், மாந்திரீகம், சித்த வைத்தியம் ஆகிய துறைகளில் இற்றைவரைக்கும் செயற்பட்டுக்கொண்டு வருகின்றான்றார்.

தனது ஆரம்ப காலம் தொட்டு களுவன்கேணி வேட்டுவ மக்களுடன் ஒன்றாகப் பழகியவர் என்ற வகையில் கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு மேலான உறவினை அவர்களுடன் கொண்டவர். இன்றைய கால கட்டத்தில் வேட்டுவ மொழியினை வழிபாட்டுச் செயன்முறைக்கு அப்பால் சரளமாகப் பேசக்கூடிய ஒருவராகவும் இவர் காணப்படுகின்றார்.