ஆளுமை:சண்முகநாதன், செல்லத்துரை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சண்முகநாதன்
தந்தை செல்லத்துரை
தாய் சிவகங்கை
பிறப்பு 1911.01.11
இறப்பு 1979
ஊர் தெல்லிப்பளை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகநாதன், செல்லத்துரை (1911.01.11 - 1979) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட நடிகர், நாடகத் தயாரிப்பாளர், எழுத்தாளர், மேடை நாடக இயக்குனர், ஓவியர். இவரது தந்தை செல்லத்துரை; தாய் சிவகங்கை. இவர் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி (தெல்லிப்பளை அமெரிக்கமிஷன் ஆங்கில பாடசாலை) ஆகியவற்றில் கல்வி பயின்றவர். கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரியில் உயர் கல்வி பெற்றார். சானா, இலங்கை வானொலி நாடகத்துறையின் பிதாமகர் என்று அழைக்கப்படும் இவர், 1950களில் பிபிசியில் பயிற்சி பெற்றார். இவர் இலங்கை வானொலி நிகழ்ச்சிகளாக 20 கேள்விகள், விவேகச் சக்கரம், மத்தாப்பு போன்றவற்றைத் தயாரித்தார்.

உரைநடைச் சித்திரங்கள் வரைவதில் வல்லவரான இவர், சென்னை அரசினர் கலைக்கல்லூரியில் சித்திரம் பயின்று (1940-1942) சித்திர தராதரப் பத்திரம் பெற்றார். இவர் 1939 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்தில் வெளிவந்த பத்திரிகையான ஈழகேசரியில் முதலில் ஓவியராகவும் பின்னர் உதவியாசிரியராகவும் பணியாற்றிய காலங்களில் ரேகைச் சித்திரங்களையும் கேலிச் சித்திரங்களையும் வரைந்தார். வாசகர்கள் இவரை யாழ்ப்பாணத்து மாலி என பெயரிட்டழைத்தனர்.

கலையரசு சொர்ணலிங்கத்தைத் தனது நாடகக் குருவாக குறிப்பிடுகின்ற இவர், 1938 இல் கலையரசுவினால் தயாரிக்கப்பட்ட வணிகபுரத்து வாணிகன் நாடகத்தில் நடித்து பின்னர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக இந்தியா சென்று சுகுமார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த தேவதாஸி படத்தில் சிறு வேடமேற்று நடித்ததோடு இலங்கை வானொலித் தமிழ் நாடகத் தயாரிப்பாளராகவும் விளங்கினார். இலண்டனில் கந்தையா என்ற வானொலி நாடகத்தின் மூலம் பரவலான அறிமுகத்தையும் பெற்றார். இவர் தனது ஓவியங்கள் அனைத்தையும் சிலைட் ஆக வைத்திருந்தாரென்பதை அறியமுடிகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 322
  • நூலக எண்: 10571 பக்கங்கள் 35-38
  • நூலக எண்: 2970 பக்கங்கள் 18-19
  • நூலக எண்: 7478 பக்கங்கள் 01-17

வெளி இணைப்புக்கள்