ஆளுமை:கௌசல்யா, சுப்பிரமணியன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கௌசல்யா
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்கள், கலைஞர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கௌசல்யா, சுப்பிரமணியன் யாழ்ப்பாணத்தில் பிறந்த எழுத்தாளர் தற்பொழுது கனடாவில் வாழ்ந்து வருகிறார். இசையில் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர், கலாநிதி பட்டத்தையும், இதழியல் மற்றும் பொதுசனத் தொடர்பியல் துறையில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

இவரது கணவரான பேராசிரியர் நா.சுப்பிரமணியுனுடன் இணைந்து இவர் எழுதிய இந்திய சிந்தனை மரபு தமிழக அரசின் விருதையும், இலங்கை சாகித்திய மண்டல விருதையும் பெற்றுள்ளது. கனடா தமிழிசைக் கலாமன்றம் என்ற பேரமைப்பின் தேர்வாளராகச் செயற்பட்டு வரும் இவர் தமிழக பல்கலைக்கழகங்கள் பலவற்றின் முனைவர் பட்ட ஆய்வேடுகளை மதிப்பிடும் வெளிநிலைத் தேர்வாளர் ஆகவும் பங்களிப்புக்களை வழங்கி வருகிறார். தமிழில் இசைப்பாடல் வகைகள் அறிவனாரின் பஞ்சமரபு நூலை மையப்படுத்திய ஓரு நுண்ணாய்வு எனும் நூலின் ஆசிரியருமாவார்.

வளங்கள்

  • நூலக எண்: 4690 பக்கங்கள் 9-10
  • நூலக எண்: 6769 பக்கங்கள் 72-75

வெளி இணைப்புக்கள்