ஆளுமை:கோபாலசாமி, பொன்னுத்துரை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கோபாலசாமி
தந்தை பொன்னுத்துரை
பிறப்பு 1948.02.18
ஊர் கைதடி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோபாலசாமி, பொன்னுத்துரை (1948.02.18 - ) யாழ்ப்பாணம், கைதடியைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர். இவரது தந்தை பொன்னுத்துரை. இவர் மாவிட்டபுரம் இராசா, கோண்டாவில் பாலகிருஷ்ணன், இந்தியாவில் உள்ள கல்லறக் குறிச்சி இராமச்சந்திரன் ஆகியோரிடம் நாதஸ்வரத்தினை முறையாகப் பயின்றார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயம், மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயம், நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயம், தெல்லிப்பளை ஶ்ரீ துர்க்காதேவி ஆலயம், மாத்தளை முத்துமாரி அம்மன் ஆலயம், காரைநகர் சிதம்பரம், ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் முதலான ஆலயங்களிலும் இந்தியாவிலும் நாதஸ்வரம் வாசித்துள்ளார்.

இவரது கலைத்திறமையைப் பாராட்டி நல்லூர் திருஞானசம்பந்த ஆதீனத்தால் லலிதகான பூபதி பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 86