ஆளுமை:கெத்சீ, சண்முகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கெத்சீ
தந்தை முத்தையா
தாய் ரெபேக்கா
பிறப்பு 1934
இறப்பு -
ஊர் கண்டி
வகை சமூகசேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கெத்சீ, சண்முகம் (1934) கண்டி, நாவலப்பிட்டியில் பிறந்தார். இவரது தந்தை முத்தையா; தாய் ரெபேக்கா. இவர் கண்டி மவுப்பிரேவ் கல்லூரியில் கல்வி கற்றார். கல்விப் பொதுத்தராதர சாதாரணதரத்தின் பின்னர் நல்லூர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்ற பின்னர் கெத்சீ சண்முகம் ஆங்கில ஆசிரியராக கொழும்பு சென் ஜோசப் கல்லூரியில் கடமையாற்றினார். 1983ஆம் ஆண்டு இவர் ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வுப்பெற்றார். இரண்டு பிள்ளைகளின் தயார். இதன் பின்னர் இவர் உளவியல் ஆலோசகராக தன்னை சமூகசேவையில் முழுமையாக இணைத்துக்கொண்டார். ஆசியாவின் நோபல் பரிசாகக் கருதப்படும் பிலிப்பைன்சின் ரமோன் மாக்சசே விருது கெத்சீ சண்முகத்திற்கு 2017ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. யுத்தப் பாதிப்புக்கு உள்ளானவர்கள், கணவனை இழந்த பெண்கள், சிறார்கள் உள்ளிட்டவர்களுக்கு மனவள ஆலோசனைகளை வழங்கிவந்தமைக்காகவும் மனித நேயத்திற்காகவும், இலங்கையின் ஆற்றலை கட்டியெழுப்புவதிலும் இவரின் அயராத உழைப்பிற்காகவும் இந்த ரமோன் மாக்சசே விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர் பல நிறுவனங்களில் கடமையாற்றியுள்ளார். குறிப்பாக நோர்வே நாட்டின் save the children (Redd Barna) கடமையாற்றிய போது இந் நிறுவனத்தின் ஊடாக உளவியல் சார்ந்த பயிற்சிக்காக இந்தியா, கம்போடியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சென்று பயிற்சிகளைப் பெற்றுள்ளார். அங்கு பெற்ற பயிற்சிகளின் ஊடாக எமது நாட்டில் உள்ள மக்களுக்கு தேவைக்கேற்ப வழங்கி வருவதாகத் தெரிவிக்கிறார் கெத்சீ, சண்முகம். பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவர்களின் குணநலன்களை மேம்படுத்துவதற்கு முயற்சிசெய்தால் நன்றாக இருக்கும் . கண்ணீரால் நிரம்பியுள்ள இந்துசமுத்திரத்தின் முத்தான எமது நாடு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவேண்டும்.சிறு துளியாக இருக்கும் மனவள ஆலோசகர்கள் பெருதுளியாக மக்களை வன்முறைகளில் இருந்து தப்புவித்து சந்தோசம் மிக்கவர்களாக மாற்றவேண்டும் என்பதே அவரின் பேரவா என்கிறார்.


குறிப்பு : மேற்படி பதிவு கெத்சீ, சண்முகம். அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

வெளி இணைப்புக்கள்

கெத்சீ, சண்முகம் தொடர்பாக sbs வானொலியின் நேர்காணல்

கெத்சீ, சண்முகம் பற்றி The Hindu பத்திரிகையில்

கெத்சீ, சண்முகம் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:கெத்சீ,_சண்முகம்&oldid=547134" இருந்து மீள்விக்கப்பட்டது