ஆளுமை:குமாரசுவாமி, வை.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குமாரசுவாமி
பிறப்பு
ஊர் சாவகச்சேரி
வகை ஆசிரியர், அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குமாரசுவாமி, வை. சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட பயிற்றப்பட்ட ஆசிரியர், அதிபர். தியாகு வாத்தியார் என அழைக்கப்பட்ட இவர், சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் கற்றுத் தனது அந்திம காலம் வரை புங்குடுதீவில் சேவையாற்றினார்.

இவர் பிறந்த ஊர், சமயம் பற்றிச் சிந்தித்துத் தமிழ் இன விடுதலை இயக்கங்களுக்குப் பேராதரவு நல்கி தமிழின அகிம்சைப் போராட்டங்களில் பங்கு கொண்டார்.

இவர் 1950 இல் இறுபிட்டி சனசமூக நிலையத்தை உருவாக்கி அன்றாடப் பத்திரிகைகளையும் மாத, வார நூல்களையும் வழங்கியதுடன் அதற்குத் தலைவராகவும் இருந்துள்ளார். அத்தோடு இறுபிட்டி ஐக்கிய நாணயச் சங்கச் செயலாளராகவும் தலைவராகவும் சேவையாற்றியதோடு இறுபிட்டி மூத்த நயினார்புலம் ஶ்ரீ சித்தி வீரகத்தி விநாயகர் ஆலயச் செயலாளராகவும் இருந்து ஆலய வளர்ச்சியில் ஈடுபட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 194
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:குமாரசுவாமி,_வை.&oldid=193788" இருந்து மீள்விக்கப்பட்டது