ஆளுமை:கிறிஷ்ரீனா வசந்தி, நேரு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிறிஷ்ரீனா வசந்தி
பிறப்பு 1961.11.19
ஊர் மட்டக்களப்பு
வகை கலைஞர்

கிறிஷ்ரீனா வசந்தி, நேரு (1961.11.19) மட்டக்களப்பில் பிறந்த கலைஞர். வட இலங்கை சங்கீத சபை 4ஆம் தரத்தை முடித்துள்ளார். திருமதி கமலா ஞானதாஸை குருவாகக் கொண்டவர். 1982ஆம் ஆண்டு நடன ஆசியராக நியமனம் பெற்றவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டத்தையும், திறந்த பல்கலைக்கழத்தில் கல்வி டிப்ளோமாவையும் முடித்துள்ளார். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பரதநாட்டிய விசேட பயிற்சியினை பிரம்மஸ்ரீ வீரமணி ஐயாவிடம் பெற்றவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடன டிப்ளோமாவையும், நுண்கலை முதுமாணிப் பட்டத்தையும் பெற்றவர். ஒலுவில் பல்கலைக்கழத்தில் உளவளத்துறை டிப்ளோமாப் பட்டத்தையும் பெற்றுள்ளார். ”நிருத்திய கலாலயம்” எனும் கலைக்கூடத்தை நடத்தி வருகின்றார்.