ஆளுமை:கிருஸ்ணகுமார், கிருஸ்ணப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிருஸ்ணகுமார்
தந்தை கிருஸ்ணப்பிள்ளை
தாய் ஜில்வராணி
பிறப்பு 1990.03.15
ஊர் களுவன்கேணி, மட்டக்களப்பு
வகை இளம் வேடமதகுரு
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கிருஸ்ணப்பிள்ளை கிருஸ்ணகுமார் (1990.03.15) களுவன்கேணி மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் வேட மதகுரு. இவரது தந்தை கிருஸ்ணப்பிள்ளை;தாய் ஜில்வராணி. இவரது மனைவி சுலக்‌ஷனா. இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் தரம் பத்து வரை களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்றுள்ளார். இவர் இன்று வரை தமது வேடமரபினையும், சடங்காசாரங்களினை செவ்வனே ஈடேற்றிக் கொண்டிருக்கும் இன்றைய தலைமுறைக்குகான வேட இளம் மதகுருவாகக் காணப்படுகின்றார். அத்துடன் வேடர் மரபு மற்றும் தமிழ் மரபு சார்ந்த சடங்கு நடவடிக்கைகளை முன்னின்று நடத்தக்கூடியவராகவும் காணப்படுகின்றார். தனது சமூகம் சார்ந்த வழிபாட்டு முறைகளில் எந்தளவு வாலாயமானவரோ அந்தளவுக்கு தமிழ் மரபு, பத்ததி மரபுகளிலும் வாலாயமானவராகக் காணப்படுகிறார். தனது சமூகத்தின் ஊடாக தான் கற்றுக்கொண்ட சடங்குடன் இணைந்ததான நோய் நீக்கல் முறைமைகளை வெளிமாவட்டங்களிலும் செயற்படுத்திக் கொண்டிருக்கும் ஒருவராகவும் காணப்படுகின்றார். அவ்வகையில் மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் முதலான தமிழ் பிரதேசங்கள் எங்கும் தமது வேடர் வழிபாட்டு மரபினை நவீன சிந்தனைகளைப் புரிந்து கொண்டும் வினையாற்றக் கூடியவராகவும் காணப்படுகின்றார்.