ஆளுமை:கிருஷ்ணப்பிள்ளை, வீரக்குட்டி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிருஷ்ணப்பிள்ளை
தந்தை வீரக்குட்டி
தாய் கண்மணி
பிறப்பு 1965.10.05
ஊர் களுவன்கேணி, மட்டக்களப்பு
வகை வேட மதகுரு (கப்புறாளை)
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கிருஷ்ணப்பிள்ளை, வெள்ளக்குட்டி (1959.06.05) மட்டக்களப்பு, களுவன்கேணியைச் சேர்ந்த ஒரு வேட மதகுரு (கப்புறாளை). இவரது தந்தை வெள்ளக்குட்டி; தாய் கண்மணி இவரது மனைவி ஜில்வராணி ஆவார். தனது ஆரம்பக் கல்வியை களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் மூன்றாம் வகுப்பு வரை வரை படித்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் வேடர் வழிபாட்டினை திறம்பட முன்னெடுத்துச் செல்லும் கப்புறாளையாகவும், கொட்டு மற்றும் மத்தள வாத்தியக் கலைஞராகவும், கூத்து அண்ணாவியாராகவும் காணப்படுகின்றார்.

அவரது ஆரம்ப காலம் தொடக்கம் தனது முன்னோர்களின் பால் கொண்ட ஈப்பாலும், அவர்களின் வழி நடத்தல்களாலும் வேட்டுவ சமுதாயத்தில் சடங்கார்ந்த நடவடிக்கைகள், ஆற்றுகையம்சங்கள் மற்றும் மந்திர மருத்துவ முறைகள் என்பவற்றில் வாலாயமான ஓர் நபராக விளங்கினார்.

இவர் தனது ஆரம்பகாலத்தில் வேட்டுவச்சடங்களை நிகழ்த்தி வந்த அவரின் பெரியம்மாவான குடல்புரி ஆச்சி அவர்களிடம் இருந்து குருவாக்கு பெற்று கடந்த மூன்று தசாப்தங்களாக (27 வருடங்கள்) வேட்டுவச்சடங்கார்ந்த நிகழ்வுகளை ஒரு கப்புறாளை அந்தஸ்துடன் நிகழ்வித்து வருகிறார். தனக்குப்பின் பல சந்ததிகளை உருவாக்கிக் கொண்டிருப்பதனோடு, வேடமொழியினால் சடங்காசாரங்களை நடாத்தவும், ஓரளவு பேசவும் கூடியவர். அதுமட்டுமல்லாமல் இவரொரு சிறந்த கூத்து அண்ணாவி, கூத்துக்கலைஞர், பறையிசைக்கலைஞருமாவார்.