ஆளுமை:கலைவாணி, திருநாவுக்கரசு'''
பெயர் | கலைவாணி |
தந்தை | திருநாவுக்கரசு |
தாய் | இராஜேஸ்வரி |
பிறப்பு | 1962.03.06 |
ஊர் | நல்லூர் |
வகை | பெண் ஆளுமை |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கலைவாணி, திருநாவுக்கரசு யாழ்ப்பாணம நல்லூரில் பிறந்த கலைஞர். . இவரது தந்தை திருநாவுக்கரசு; தாய் இராஜேஸ்வரி. ஆரம்பக் கல்வியை நல்லூர் சாதனா பாடசாலையிலும் இடைநிலை உயர் கல்வியை யாழ் இந்து மகளிர் கல்லூரியிலும் கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வர்த்தகவியல் பட்டதாரியாவார். சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் ஆசிரியராக சில காலம் கடமையாற்றிய இவர் யாழ் தென்னை வள அபிவிருத்திச் சங்கத்தில் கணக்காளராகவும் பணியாற்றினார்.
ஊடகத்துறையில் இருந்த விருப்பம் காரணமாக கணக்காளர் பதவியைத் இராஜினாமா செய்து ஈழநாதம் பத்திரிகையில் பயிலுனர் உதவி ஆசிரியராகச் இணைந்து கொண்டார். பத்திரிகைத் துறையில் இணைந்த போதும் யாழ் பல்கலைக்கழகத்தின் உதவி நூலகர் என்ற பதவியை ஏற்றார். கொழும்பு பல்கலைகழகத்தில் நூலகவியல், முதுகலைமாணி பட்டம் பெற்றார், தொடர்ந்து 1997ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் புலமைப் பரிசு பெற்று, இந்தியாவின் பெங்களுர் பல்கலைக்ழகத்தில் நூலகவியல் மற்றும் தகவல் விஞ்ஞானம் துறையில் கலாநிதி பட்டம் பெற்றார். தொடர்ந்து யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். தொடர்ந்து கல்வி கற்கும் நோக்கில் இங்கிலாந்து சென்று மேற்கு இலண்டன் பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை ஊடகவியலாளர் துறையில் கலாநிதிப் பட்டம் பயின்றுகொண்டிருந்த போது இறந்துவிட்டார்.