ஆளுமை:கணேஸ், கந்தையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கந்தையா கணேஸ்
தந்தை கந்தையா
தாய் பொன்னம்மா
பிறப்பு 1951.06.05
ஊர் கிளிநொச்சி, சோரன்பற்று
வகை நாட்டுக்கூத்து கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணேஸ், கந்தையா (1951.06.05 - ) கிளிநொச்சி, பளையை பிறப்பிடமாகக் கொண்ட நாட்டுக்கூத்து கலைஞர். இவரது தந்தை கந்தையா; தாய் பொன்னம்மா. சோரன்பற்று தேசங்களில் உள்ள அம்மன் கோவில்களில் நடைபெற்ற திருவிழாகள் பலவற்றில் நடைபெற்ற கூத்துக்களில் அண்ணாவியாராக திகழ்ந்தார்.

உருத்திரபுரம் சிவன் கோயில், கண்டாவளை, புளியங்குளம், கிளாலிவீரபத்திரர், வழிவிடு முருகன், புலோப்பளை, கச்சாய்அம்மன், நவீன் வழி அம்மன் போன்ற பல இடங்களில் இவர் காத்தவராயன் கூத்துக்களை மேடையேற்றியவர். 1988 இல் கோவலன் கண்ணகி இசை நாடகத்தை மேடை ஏற்றியவர். 1972 ஆம் ஆண்டு சரஸ்வதி கலா மன்றத்தை ஸ்தாபித்தார். சரஸ்வதி கலா மன்றத்தின் மூலம் சோரன்பற்று பிரதேசத்திற்கு பல கலைதொண்டுகளை செய்துள்ளார்.

இவரின் கலைதொண்டினை பாராட்டி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தால் கெளரவிக்கப்பட்டுள்ளார்.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:கணேஸ்,_கந்தையா&oldid=488103" இருந்து மீள்விக்கப்பட்டது